Sunday, July 5
Shadow

விஷால் நடிக்கும் சக்ரா திரைப்படம் OTT யில் ரிலிஸ் இல்லை தயாரிப்பு நிர்வாகம்

கொரானா கோரவதாண்டவம் இன்று உலகையே உலுக்கிகொண்டுள்ளது இதனால் உலக பொருளாதாரம் முழுமையாக சரிந்துவிட்டது இதில் குறிப்பாக மக்கள் கூட்டம் அதிகம் சேரும் இடங்கள் பெரிதாக பாதித்துள்ளது காரணம் நோய் தோற்று காரணமாக இதில் ஷாப்பிங் மால் திரையரங்கம் இதுமாதிரி பல இடங்கள் பாதித்துள்ளது. இதற்கு முற்றுபுள்ளி எப்போது என்று இன்னும் யாராலாம் அரியபடவில்லை. மீண்டும் சகஜ நிலைமை எப்போது என்று கேள்விக்குறியாக உள்ளது .

இந்த கோரனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது சினிமாவும் இதனால் பல படங்கள் கோடிகணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள படங்கள் வெளியாகாமல் தயாரிப்பளர்கள் மிகவும் நஷ்டபட்டுள்ளனர் .வட்டி கட்டியே மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளபட்டுள்ளனர் .இதனால் மாற்று வழி OTT யில் பிளட்பாரம் வழியாக வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது தற்போது மேலும் மூன்று படங்கள் மேல் வெளியாக தயாராக உள்ளது.

இதற்கிடையில் விஷால் நடிப்பில் மிக பெரிய பொருட்செலவில் உருவாகிவரும் படம் சக்ரா இந்த படமும் OTT பிளாட்பாரத்தில் வெளியாகும் என்று செய்திகள் கசிந்தது ஆனால் இதறக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இன்னும் 7 நாள் படப்பிடிப்பு மீதமுள்ளது. அரசு அனுமதி அளித்தவுடன் மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்படும். அக்காட்சிகளுக்குக் கூட்டமோ நிறைய நடிகர்களோ தேவையில்லை. அதிகப் பொருட்செலவில் சக்ரா படம் உருவாக்கப்பட்டுள்ளதால் ஓடிடியில் நேரடியாக வெளியாகாது. நிச்சயமாகத் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.