Sunday, October 13
Shadow

நாடக நடிகருக்கு வாய்ப்பு தந்த விஷால்

விஷால் நடிப்பில் உருவாகி வரும் கத்தி சண்டை திரைப்படத்தில் ஆரணி அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்த
“வாசுதேவன் குமணன் “ என்பவர் விஷாலின் நண்பராக நடித்துள்ளார். படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிக முக்கிய பாத்திரமாகும். அடிப்படையில் நாடக நடிகரான இவர் தென்னிந்திய நடிகர் சங்க நியமன செயற்குழு உறுப்பினர் ஆவார். இவர் நடிகர் சங்க தேர்தலுக்கு முன்னிருந்து விஷாலின் தலைமையிலான “ பாண்டவர் அணியின் “ வெற்றிக்காக உழைத்து வந்தார். அதன் மூலம் விஷாலுடன் நட்பு ஏற்பட்டு விஷால் நடிக்கும் கத்தி சண்டை திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவர் மட்டுமின்றி கத்தி சண்டை திரைப்படத்தில் நடிகர் சங்கத்தை சேர்ந்த ஜெரால்ட் உள்ளிட்ட சிலர் இவரோடு நடிக்கிறார்கள்.நாடகத்தில் நடித்து வந்த தனக்கு நட்பின் அடிப்படையில் முதன்முறையாக சினிமாவில் காலெடுத்து வைக்க வாய்பளித்த நடிகர் சங்க பொது செயலாளர் விஷாலுக்கு வாசுதேவன் தன்னுடைய நன்றிகளை தெரிவித்து கொண்டார்.

Leave a Reply