Wednesday, April 1
Shadow

நடிகர் விஷால் மக்கள் நல இயக்கத்தின் உறவுகளுக்கு அன்பு வேண்டுகோள்

புரட்சி தளபதி விஷால் அவர்களின் அன்பான வேண்டுகோள்களுக்கு இணங்க
நமது மக்கள் நல இயக்கத்தின் உறவுகளுக்கு வணக்கம்….!

உலகை அச்சுறுத்தி வரும் கொடிய
*கொரோனாவைரஸ்* தொற்று நோயில் இருந்து நம்மையும், எதிர்கால தலைமுறையினரையும் பாதுகாக்க வேண்டிய தலையாய கடமையில் நாம் அனைவரும் இருக்கிறோம்.
எனவே யாரும் இந்த கொடிய நோயின் பிடியில் சிக்காமல் நம்மையும் சுற்றுபுறத்தயும் தூய்மையாக வைப்பதுடன்
மத்திய, மாநில அரசின் உத்தரவுபடி அனைவரும் வீட்டினுள் இருப்பது நம்மை மட்டுமல்ல நம்மை சாந்துள்ளவர்களுக்கும் நன்று….

இச்சமயத்தில் தன்னலம் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் காவல் துறை நண்பர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள் மற்றும் நன்றி வணக்கங்கள்….

நாம் அனைவரும் சமூக அக்கறையுடன் காத்திருக்க வேண்டும்.
ஒரு இந்தியனாக தேசத்தையும் பாதுகாக்க வேண்டும்

தனித்திரு..
விழித்திரு…

அன்புடன்
V.ஹரிகிருஷ்ணன்
செயலாளர், மக்கள் நல இயக்கம்