சமீபத்தில் நடைபெற்ற ‘ரெமோ’ திரைப்பட விழாவில், நடிகர் சிவகார்த்திகேயன் மேடையில் அழுததோடு, தங்களை வேலை செய்யாமல் பலர் தடுக்க நினைக்கிறார்கள், என்று கூறினார். சிவாவின் இந்த பேச்சு வைரலாக பரவ, விசாரணையை தொடங்கிய ஊடகங்கள் சிவகார்த்திகேயனை மிரட்டியவர்கள் குறித்து நேரடியாகவும், மறைமுகமாகவும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில், இன்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்க செயலாளர் விஷாலிடம், இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ”சிவகார்த்திகேயன் மட்டும் பாதிக்கப்படவில்லை, நானும் ஒரு காலத்தில் கட்டப்பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். இருந்தாலும் சிவகார்த்திகேயன் அளித்த புகாரில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.