
வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு விஷால், அதன் பிறகு பல படங்களில் நடித்தும் வெற்றி கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் இயக்குநர் எழில் இயக்கிய ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் அவருக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது.
இந்த காமெடி படம் 50 நாட்கள் ஓடி விஷ்ணுவின் கேரியரில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றிப்படமாகவும் அமைந்தது. தனது சொந்த தயாரிப்பும் சோடை போகாமல் வசூலில் அள்ளிகுவித்தது இதனால் மேலும் பெயர் கமர்சியல் ஹீரோ என்ற பட்டமும் வாங்கி கொடுத்துள்ளது .
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் வெற்றி எந்தளவுக்கு விஷ்ணு விஷாலுக்கு அந்தஸ்தை அதிகப்படுத்தியது தெரியுமா? குற்றப்பரம்பரை படத்தை ட்ராப் பண்ணிய பாலா, தன்னுடைய அடுத்தப் படத்தின் ஹீரோவாக விஷ்ணு விஷாலை கமிட் பண்ண நினைக்குமளவுக்கு அவரது ஸ்டேட்டஸ் உயர்ந்தது.
தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘மாவீரன் கிட்டு’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். இந்நிலையில், தனது அடுத்த தயாரிப்பிற்கான பூஜையை நடத்தி முடித்துள்ளார் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால். அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கவிருக்கும் இப்படம் குறித்து மற்ற விவரங்கள் விரைவில் வெளிவரும்.