Saturday, October 12
Shadow

திரைவிமர்சனம் (வித்தை) Rank 3/5

 

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்த சதீஷ் நாய் சேகர், காஞ்ஜூரிங் கண்ணப்பன் படங்களை தொடர்ந்து மீண்டும் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் வித்தைக்காரன். இப்படத்தை வெங்கி இயக்கியுள்ளார்.

படத்தின் கதைப்படி சதீஷின் அப்பா மேஜிக் கலைஞர் என்பதால் தனது மகனுக்கும் அந்த கலைகளை கற்றுக் கொடுக்கிறார். இந்த நிலையில் சட்டவிரோத தொழில் செய்யும் சேட்டுவிடம் மூன்று பேர் வேலை செய்து வருகின்றனர். அந்த சேட்டையே கொலை செய்துவிட்டு அந்த பழியை வேறு ஒருவரின் மேல் போட்டுவிடுகின்றனர். அந்த மூன்று பேரும் பின்னாளில் மிகப் பெரிய கடத்தல் ஆசாமிகளாக உருவெடுத்து தனித்தனியாக பிரிந்து தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் மூவருக்கும் உதவுவதுபோல் நடித்து ஒரு மிகப் பெரிய பிரச்சினையில் சிக்க வைக்கிறார் நாயகன். ஏன் அப்படி செய்தார்? அதற்கான காரணம் என்ன? என்பதே வித்தைக்காரன்.

நாயகன் சதீஷ் மேஜிக்காரன் என்று மிகப் பெரிய பில்டப்புடன் அறிமுகமாகி தனக்கு கிடைத்ததை மிக கன கச்சிதமாக செய்து இருக்கிறார். கடைசிவரை படத்தை நகைச்சுவையாக கொண்டு செல்கிறார் . இது காமெடி கதைதான் லாஜிக் பார்க்க கூடாது . படத்தின் மிக பெரிய பலம் என்றால் படத்தின் திரைக்கதை எழுதி சபாஷ் வாங்குகிறார் இயக்குனர் வெங்கி.

நாயகி சிம்ரன் குப்தா பயங்கரமான அறிமுகத்துடன் வந்து பின்னர் பத்தோடு பதினொன்றாக திரையில் தேமே என வந்துகொண்டு இருக்கிறார். ஆனந்தராஜ் தனது வழக்கமான காமெடியில் அங்கங்கே சிரிக்க வைக்கிறார். படத்திற்கு மிக பெரிய பலமாக இருக்கிறார் ஒளிப்பதிவு சுமார். பாடல்கள் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் . சதீஷ் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தும் சதீஷ் நாயகன் என்பதால் சண்டை நடனகங்களில் கொஞ்சம் கவனம் தேவை

மொத்தத்தில் வித்தைக்காரன் – சிரிக்கவைக்கிறான். ரேட்டிங் 3/5