
KJB டாக்கீஸ் தயாரிக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2much’ படத்தை, நடிகர் விஷ்ணு விஷாலின் Vishnu Vishal Studios நிறுவனம் வழங்குகிறது. இந்த அறிவிப்பை படக்குழு பெருமையுடன் வெளியிட்டுள்ளது.
நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஹாட் ஸ்பாட் 2much’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. அதோடு, படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர், நடிகைகளின் விவரங்களையும் ஒரு வித்தியாசமான, கண்ணைக் கவரும் அறிமுக காணொலியாக வெளியிட்டுள்ளனர்.
இந்த படம், ‘ஹாட் ஸ்பாட்’ முதல் பாகத்தை விட இன்னும் அதிகமான சுவாரஸ்ய திருப்பங்களுடன், குடும்பத்துடன் சேர்ந்து ரசிக்கக் கூடிய ஒரு முழு ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி வருகிறதாம்.
இயக்குநரும் நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர், ரக்சன், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜெகதீஷ் ரவி மற்றும் ஜோசப் பால் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு, சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். யூ. முத்தையன் படத்தொகுப்பையும், சண்முகம் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான K.J. பாலமணிமார்பன், KJB டாக்கீஸ் சார்பில் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
படத்தைப் பற்றி இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசும்போது,
“முதல் பாகம் நான்கு கதைகள் கொண்ட ஆந்தாலஜி படம். இரண்டாம் பாகத்தில் மூன்று கதைகள் இருக்கும். முதல் பாகத்தில் இருந்த கதை சொல்லும் வடிவம் இப்போதும் தொடர்கிறது. ஆனால் இந்த முறை இன்னும் எதிர்பாராத திருப்பங்களுடன், சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறோம். நானே இந்த படத்திலும் நடித்துள்ளேன். இது முழுக்க அனைவரும் ரசிக்கக் கூடிய ஃபேமிலி என்டர்டெய்னர்” என்று கூறினார்.
தயாரிப்பாளர் K.J. பாலமணிமார்பன் பேசுகையில்,
“முதல் பாகத்தின் ட்ரெய்லர் வந்தபோது சில எதிர்மறை விமர்சனங்கள் இருந்தது. ஆனால் படம் வெளியானதும் அதுவே படத்தின் வெற்றிக்கு உதவியது. முதல் பாகம் பெரியவர்களுக்கான படமாக இருந்தது. ஆனால் ‘ஹாட் ஸ்பாட் 2much’ அனைத்து வயதினரும், குறிப்பாக ஜென் Z இளைஞர்கள் குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது. சமூக கருத்துகளும் இருக்கிறது, அதே நேரத்தில் ஜாலியாகவும் சொல்லியிருக்கிறோம். நடிகர்கள், திரைக்கதை எல்லாமே முதல் பாகத்தை விட இரண்டு மடங்கு மேம்பட்டுள்ளது. இதனால்தான் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இந்த படத்தை வழங்க முன்வந்தது” என்று தெரிவித்துள்ளார்.
ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக வீடியோ நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

We are proud to announce that Vishnu Vishal Studios is presenting ‘Hot Spot 2much’, produced by KJB Talkies.
The first look of the film ‘Hot Spot 2much’, starring actress Priya Bhavani Shankar in the lead role, has been officially released.
Produced by KJB Talkies, the first look of ‘Hot Spot 2much’ has been unveiled, and the film is being described as a family entertainer with unexpected and interesting twists, surpassing the first part.
Along with the first look of ‘Hot Spot 2much’, the film team has also released a unique and eye-catching introduction video, officially announcing the cast and crew members involved in the project.
Directed by Vignesh Karthik, who also plays an acting role in the film, ‘Hot Spot 2much’ features Priya Bhavani Shankar, MS Bhaskar, Thambi Ramaiah, Ashwin Kumar, Adithya Bhaskar, Raksan, Bhavani Sree, Brigida Saga, Sanjana Tiwari, ‘Adithya’ Kathir, Vijay TV Amar, and several others in prominent roles.
The cinematography of the film has been handled jointly by Jagadish Ravi and Joseph Paul, while Satheesh Raghunathan has composed the music. U. Muthaiyan has taken care of the editing, and Shanmugam has served as the art director. The film has been produced by producer and actor K.J. Balamani Marban under the banner of KJB Talkies. ‘Hot Spot 2much’ is being presented by Vishnu Vishal Studios, owned by actor Vishnu Vishal.
Speaking about the film, director Vignesh Karthik said:
“The first part of ‘Hot Spot’ was an anthology film with four stories. The second part will feature three stories. The narrative style of a director narrating stories to a producer continues in this film as well, but this time the three stories are presented with unexpected and engaging twists. I have also acted in this film. ‘Hot Spot 2much’ has been made as a family entertainer that everyone can enjoy. Along with entertainment, the film equally addresses socially relevant themes.”
Producer and actor K.J. Balamani Marban, speaking about the film, said:
“When the trailer of the first part was released, the film faced negative criticism. However, once the film was released, those criticisms actually contributed to its success. The first part was aimed at a mature audience, but the second part has been made as a mass-friendly family entertainer that all sections of the audience can enjoy—especially Gen Z viewers, who can come to theatres with their families. While the socially relevant themes from the first part continue in this sequel, they are presented in a lighter and more entertaining manner. Compared to the first part, the contribution of star actors and the strength of the screenplay have doubled. This is the reason Vishnu Vishal Studios decided to present ‘Hot Spot 2much’. After watching the first part, Vishnu Vishal appreciated it, and after listening to the complete story of the second part, he felt it was even better and proudly agreed to present the film under his banner.”
Following the strong response to the first look and introduction video, the film team has announced that official updates regarding the songs, teaser, trailer, and release date will be revealed soon.
