Wednesday, November 11
Shadow

கனவுக்கும் நிஜத்துக்கும் நடுவே ஒரு மாய உலகம்! ஃபேண்டஸி, ஹாரர், சயின்ஸ் ஃபிக்ஷன், காமெடி கலக்கும் ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16 முதல் திரையரங்குகளில்!

கனவுக்கும் நிஜத்துக்கும் நடுவே ஒரு மாய உலகம்!

ஃபேண்டஸி, ஹாரர், சயின்ஸ் ஃபிக்ஷன், காமெடி கலக்கும் ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16 முதல் திரையரங்குகளில்!

சென்னை: கனவுகளில் மட்டுமே சாத்தியமாகத் தோன்றும் சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நிகழ்ந்தால் என்னவாகும்? அந்தக் கேள்வியை மையமாக வைத்து, ஃபேண்டஸி, ஹாரர், சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் நகைச்சுவையை வித்தியாசமான திரைமொழியில் இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘டிரோன்ஸ்’ (Drones).

GM Morgan Films தயாரிப்பில், R. ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இப்படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரைஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், ‘டிரோன்ஸ்’ படத்தின் டிரெய்லர் மற்றும் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளன. வெளியான டிரெய்லர், பார்வையாளர்களை இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான கற்பனை உலகத்துக்குள் அழைத்துச் செல்கிறது.

ப்ளாக் ஹோலுக்குள் தொடங்கும் மர்மப் பயணம்!

மர்மம் நிறைந்த ‘ப்ளாக் ஹோல்’ எனப்படும் இடத்துக்குள் மூவர் நுழைவது, அந்த மர்மமான பகுதியைப் பற்றி விசாரணை மேற்கொள்ளும் காவல் அதிகாரி, மறுபுறம் சூனியக்காரிக்கும் தேவதைக்கும் இடையே உருவாகும் மோதல் என, படத்தின் கதைக்களம் பல்வேறு சுவாரஸ்யமான அடுக்குகளைக் கொண்டதாக டிரெய்லரில் காட்சியளிக்கிறது.

மாயாஜாலம், மர்மம், அமானுஷ்யத் தன்மை, அறிவியல் புனைகதை ஆகியவற்றுடன் நகைச்சுவையையும் கலந்து சொல்லப்பட்டிருக்கும் இப்படத்தின் டிரெய்லர், ‘டிரோன்ஸ்’ வழக்கமான திரைப்பட அனுபவத்திலிருந்து மாறுபட்டதாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

‘விட்ச் Vs ஏஞ்சல்’ – மாயாஜால மோதல்!

படத்தின் புதிய போஸ்டரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒருபுறம் சிவப்பு நிற ஆடையில் சூனியக்காரியைப் போன்ற தோற்றத்தில் ஒரு பெண்ணும், மறுபுறம் வெள்ளை நிற ஆடையில் தேவதையைப் போன்ற தோற்றத்தில் மற்றொரு பெண்ணும் நேருக்கு நேர் நிற்கும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே உருவாகும் மாயாஜால சக்திகளும், ‘விட்ச் Vs ஏஞ்சல்’ எனக் குறிப்பிடப்படும் மோதலும், படத்தின் பிரதான கற்பனை உலகத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

ஏற்கெனவே வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரும் புதிய போஸ்டரும் ‘டிரோன்ஸ்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன.

வித்தியாசமான கற்பனைக்கு உயிர் கொடுக்கும் ‘டிரோன்ஸ்’

கனவு என்பது மனிதனின் கற்பனை உலகம். அந்தக் கனவு உலகத்தின் விசித்திரங்கள் நிஜ உலகிற்குள் வந்தால் ஏற்படும் குழப்பங்களையும் சுவாரஸ்யங்களையும் திரையில் கொண்டுவரும் முயற்சியாக ‘டிரோன்ஸ்’ உருவாகியுள்ளது.

மர்மமான கதாபாத்திரங்கள், எதிர்பாராத திருப்பங்கள், மாயாஜாலக் காட்சிகள், விறுவிறுப்பான சம்பவங்கள், நகைச்சுவைத் தருணங்கள் என பல்வேறு அம்சங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், குடும்ப ரசிகர்களுக்கும் ஃபேண்டஸி திரைப்படங்களை விரும்பும் இளம் தலைமுறையினருக்கும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை R. ராகவ் மிர்தாத் கவனித்துள்ளார். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். ஹரி S.R. இசையமைக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

GM Morgan Films சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் K. செந்தில் வெளியிடுகிறார்.

தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் ‘டிரோன்ஸ்’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. வழக்கமான கதைக்களங்களைத் தாண்டி, பார்வையாளர்களை ஒரு புதிய கற்பனை உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் திரைப்படமாக ‘டிரோன்ஸ்’ அமையுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

 

When Dreams Enter Reality: ‘Drones’ Trailer Unveils a Mysterious Fantasy World

Fantasy, Horror, Sci-Fi and Comedy Come Together in R. Raghav Mirdhad’s ‘Drones’ – Releasing October 16

Chennai: What if the strange and impossible events that happen only in dreams suddenly became a part of the real world? Exploring this intriguing idea, ‘Drones’, an unconventional fantasy film blending fantasy, horror, science fiction and comedy, is gearing up for its theatrical release on October 16.

Produced by GM Morgan Films and directed by R. Raghav Mirdhad, the film features Siddhi Idnani, Anjali Nair, Devadarshini, Dravid Selvam, Qureshi, Cinemawala Sathish and Sasi Selvaraj, among others.

The makers have now unveiled the much-awaited trailer and a new poster, offering a glimpse into the film’s unusual and imaginative world.

A Journey Into the Mysterious ‘Black Hole’

The trailer introduces viewers to a mysterious world revolving around a place known as the ‘Black Hole’. Three individuals venture into this strange space, while a police officer begins investigating the mystery surrounding it.

Adding another intriguing layer to the narrative is a confrontation between a witch and an angel, suggesting that the film’s fantasy world is filled with magical forces, mysterious characters and unexpected encounters.

The trailer combines elements of horror, fantasy and science fiction with humour, promising an entertaining experience that moves beyond the conventions of a typical genre film.

Witch vs Angel – A Battle of Magical Forces

The newly released poster has also caught attention with its striking fantasy imagery. It features two women standing face-to-face—one dressed in red with the appearance of a witch and the other dressed in white, resembling an angel.

The visual hints at a powerful magical confrontation between the two characters, highlighted by the intriguing tagline ‘Witch Vs Angel’. Following the curiosity generated by the film’s earlier first-look posters, the latest trailer and poster have further raised expectations surrounding the film.

A Fantasy World Inspired by Dreams

At its core, ‘Drones’ revolves around an interesting question: What happens when bizarre incidents that exist only in our dreams begin taking place in the real world?

With mysterious characters, magical elements, unexpected situations, humour and fast-paced sequences, the film aims to offer audiences a distinct cinematic experience.

The movie’s story, screenplay, dialogues and direction are by R. Raghav Mirdhad. Jayanth Sethu Madhavan is the cinematographer, while Hari S.R. has composed the music. Sathish Surya is in charge of the editing.

Produced by GM Morgan Films, the film is presented by K. Senthil of Five Star.

With its unusual concept and a mix of fantasy, horror, science fiction and comedy, ‘Drones’ is expected to appeal particularly to audiences who enjoy imaginative worlds and magical storytelling.

‘Drones’ is set to hit theatres on October 16, promising audiences a journey into a world where dreams, magic and reality collide.