Tuesday, March 18
Shadow

விஜய்யை பார்த்தாலே கை கால் உதறுகிறது – கீர்த்திசுரேஷ்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த ‘ரெமோ’ படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஒரு தெலுங்கு படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், பைரவா படத்தில் விஜய்யோடு நடித்த அனுபவம் குறித்து பல பேட்டிகளில் கீர்த்தி சுரேஷ் தனது சுவையான அனுபவங்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவருடன் டான்ஸ் காட்சிகளில் நடித்த அனுபவம் குறித்து கேட்டதற்கு அவர் கூறும்போது,

ஆரம்பத்தில் விஜய் சாருடன் நடிக்கும்போது ஆரம்பத்தில் எனக்கு பெரிதாக பயமில்லை. தற்போது அவருடன் பயங்கரமாக டான்ஸ் ஆடுவதுபோல் ஒரு பாடலை படமாக்கி வருகிறார்கள். அந்த பாடலுக்கு அவருடன் சேர்ந்து ஆடுவதற்கு எனக்கு பயமாக இருக்கிறது. விஜய் சாரை பார்த்தாலே எனக்கு கை, கால் உதறல் எடுக்கிறது. அவருக்கு இணையாக இந்த பாடலில் ஆடமுடியுமா? என்ற பயமும் இருக்கிறது என்றார்

Leave a Reply