சிம்பு நடிப்பில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியுள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் ‘தள்ளிப்போகாதே’ பாடலின் படப்பிடிப்பு சமீபத்தில் வெளிநாட்டில் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் ஒருசில போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும், சிம்புவின் டப்பிங் பணிகள் மட்டுமே பெண்டிங் உள்ளதாகவும், விரைவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி தயாராகிவிடும் என்றும் படக்குழுவினர்களின் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
சிம்பு, மஞ்சிமா மோகன், டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்காக கம்போஸ் செய்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. குறிப்பாக ஷோக்காலி மற்றும் தள்ளிபோகாதே பாடல் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அது மட்டும் இல்லாமல் இனியும் ரசிகர்களை தவிக்க விட கூடாது என்று படத்தை வரும் நவம்பர்மாதம் ரிலீஸ் செய்ய இயக்குனர் கெளதம் மேனன் ஏற்பாடுகள் நடத்திவருகிறார்.