Friday, April 19
Shadow

சிவகார்த்திகேயனை மிரட்டினார்களா கோடம்பாக்கத்தில் பரபரப்பு

நெருக்கடிக்களை கடந்து அக்டோபர் 7ல் திட்டமிட்டபடி ரெமோ ரீலீஸ் ஆகி தமிழகத்தில் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து. சென்னை தாஜ்கோரமண்டல் ஹோட்டலில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று இரண்டு நாள் முன் மாலை நடைபெற்றது.

ரெமோ படத்தில் நடித்த, மற்றும் பணி புரிந்த கலைஞர்கள், படம் வாங்கிய விநியோகஸ்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் சிவகார்த்திகேயனனை புகழ்ந்து பேசினார் அதோடு தயாரிப்பாளர் ராஜாவையும் திருப்பூர் சுப்பிரமணி ஒரு படி மேலே போய் சிவாஜி – எம்.ஜி.ஆர் வரிசையில் இன்று விஜய் – அஜீத் இவர்களுக்கு அடுத்த வாரிசாக சிவகார்த்திகேயன் உருவாகி விட்டார் என கூறினார் .

இறுதியாக மைக் பிடித்த சிவகார்த்திகேயன்” எங்களை வேலை செய்ய விடுங்கள், ரெமோ ரீலீஸ் வரைக்கும் எம்புட்டு தொந்தரவு தான் கொடுப்பிங்க என எமோசனல்ஏகம்பரமாகி விஸ்வரூபம் கமல் மாதிரியே கண் கலங்க ஒட்டுமொத்த தமிழகமே தொலைக்காட்சி நேரலையில் பார்த்து தாய்குலம் உச்சு கொட்டி நெட்டி முறித்து உச்சி முகர்ந்ததது.

அப்படி என்னதான் சிவகார்த்திகேயன்-ராஜா இருவருக்கும் நெருக்கடி என விசாரித்த போது பொன்ராம் இயக்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த “ரஜினி முருகன் ” பட ரீலீஸ்ல் இருந்து தொடங்குகிறது பிரச்சினை

தமிழ் திரைப்பட வரலாற்றில் அதிக முறை ரீலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட படம் ரஜினி முருகன் இந்த படத்தின் பட்ஜெட் குறைவு வியாபாரம் அதிகம். திருப்பதி பிரதர்ஸ் ஏற்கெனவே தயாரித்த படங்கள் சம்பந்தமாக பைனான்ஸ் பாக்கி, அதனை கொடுக்காததால் “ரஜினி முருகன் “முடங்கியது, “ரெமோ ” பட வேலைகள் தொடங்கப்பட்ட நேரம் திரையுலக பைனான்ஸ், விநியோக நாட்டாமைகள் ஒன்று கூடினர். லிங்குசாமி தர வேண்டிய கடனை வசூலிக்க சிவகார்த்திகேயனை நெருக்கினார்கள் நான் படத்தின்நடிகன் நான் எப்படி அவர் கடனுக்கு பொறுப்பாக முடியும் என கேள்வியெழுபினார் சிவா.

ரஜினி முருகன் ரிலீஸ் ஆகவில்லை என்றால் நீ நடிக்கும் எந்த படங்களை ரீலீஸ் செய்ய விட மாட்டோம் என விநியோகஸ்தர்களால் சிவகார்த்திகேயன் மிரட்டபட்டார். வேறு வழி இன்றி ரஜினி முருகன் படத்திற்கு வாங்கிய சம்பளத்துடன் கூடுதலாக ஒரு தொகையை கொடுத்த பின்னர் தான் படம் ரீலீஸ் ஆனது படம் சூப்பர் ஹிட்டடித்து. இது பஞ்சாயத்து நாட்டாமைகளும் லிங்குசாமியும் எதிர்பார்க்காத ஒன்று.

ரஜினி முருகன் பட ரீலீஸ் விஷயத்தில் தான் அவமானபடுத்தபட்டது, ஏமாற்றப்பட்டதாக கருதிய சிவகார்த்திகேயன் வெளி நபர்களுக்கு படம் நடிப்பது இல்லை என்ற முடிவு எடுத்ததின் காரணமாக ரெமோவை தொடர்ந்து அந் நிறுவனத்தின் சார்பில் தொடர்ந்து 3 படங்கள் தயாரிப்பது சம்பந்தமாக அறிவிப்பு வெளியாகிறது. ரெமோ படம் ரீலீஸ் தேதி நெருங்கும் சமயத்தில் நாட்டாமைகள் கூடுகிறார்கள் ஏற்கெனவே ஒப்புக் கொண்ட அடிப்படையில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவீஸ், ஸ்டுடியோ கீரீன் நிறுவனங்களுக்கு படம் நடித்து விட்டு தான் பிறபடங்களில் நடிக்க வேண்டும் என பஞ்சாயத்து தொடங்குகிறது.

வேந்தர் மூவீஸ் உடன் எனக்கு ஒப்பந்தம் கிடையாது என சிவகார்த்திகேயன் தரப்பில் கூறப்பட்டு நிராகரிக்கப்படுகிறது.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் 50 லட்சம் அட்வான்ஸ் எனக்கு கொடுத்தது உண்மை அதில் 25 லட்சம் ரூபாய் திருப்பி வாங்கி விட்டார். தற்போதைய நிலவரப்படி சம்பளம் கொடுத்தால் என்வசதிப்படி தான் தேதி தருவேன் என கூறப்பட்டுள்ளது சிவகார்த்திகேயன் தரப்பில்

இதே போன்று ஸ்டுடியோ கீரின் உடனான ஒப்பந்தபடி தற்போதய மார்கெட் நிலவரத்தில் சம்பளம் தர ஞானவேல்ராஜா சம்மதம் தெரிவித்ததால் தன் வசதிப்படி தேதி தருவதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளாராம்.

இதன் பின்னரும் வேந்தர் மூவீஸ், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் இருவருக்கும் தேதி கொடுக்க வேண்டும் இல்லையென்றால் அடுத்த படம் சூட்டிங்குக்கு பெப்சி ஒத்துழைப்பு தராது என மிரட்டல் விடுக்கப்பட்டது. அக்டோபர் 5ல் தொடங்க வேண்டிய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.இருப்பினும் பெப்சி ஒத்துழைக்காவிட்டாலும் ஏற்கெனவே விருப்பபட்டவர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தலாம் அதை யாரும் தடுக்க முடியாது எனும் உயர் நீதிமன்ற ஜட்ஜ்மெண்ட்டை கையில் எடுத்திருக்கிறது சிவகார்த்திகேயன் தரப்பு. இதன் பாதிப்பு மன அழுத்தம் காரணமாகவே ரெமோ நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் எமோ சனல் ஆனதாக கூறுகிறார்கள் அவர் நலம் விரும்பிகள். நடந்த திரைமறைவு நிகழ்வுகளை பகிரங்க படுத்தினால் பல திரையுலக பிரமுகர்கள் வக்கிரம், வஞ்சகமுகம் வெளிச்சத்துக்கு வரும் என்கின்றனர் சிவகார்த்திகேயன் வட்டாரம் ஊடகங்கள் முன் மனம் திறந்து பேசுவாரா?

Leave a Reply