
விஜய் டிவி புகழ் டிடி சமீபத்தில் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் டிடி குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் திருமணம் ஆன 2 வாரத்திலேயே தாலியை கழட்டி வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
சமீபகாலமாக, சினிமா பிரபலங்கள் பலரும் விவாகரத்து பெறுவது அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களை வாழ்த்துவதற்குப் பதிலாக இன்னும் எத்தனை மாசத்திற்கு இது நீடிக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பும் நிலை உருவாகிவிட்டது. அதோடு, தனியார் தொலைக்காட்சி மூலமாக திருமணம் செய்து கொள்ளும் பலரும் தற்போது விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சமீபத்தில் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது தொகுப்பாளினியும், நடிகையுமான திவ்யதர்ஷினியின் விவாகரத்து தான். டிடி-க்கும், ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர். இருந்தாலும், தற்போது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாரகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
தற்போது, இவர்களது விவாகரத்து குறித்த ரகசியத் தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதாவது, டிடி திருமணம் ஆன 2-வது வாரத்திலேயே கணவர் கட்டிய தாலியை கழட்டி வைத்துவிட்டு சென்றாராம். இது டிடியின் புகுந்த வீட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இனிமேல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஸ்ரீகாந்த் எவ்வளவோ தெரிவித்தும், அதற்கு முடியவே முடியாது என்று டிடி மறுப்பு தெரிவித்தாராம். அதோடு, தான் நடித்த பவர் பாண்டி படத்தின் டைட்டில் கார்டில் செல்வி திவ்யதர்ஷினி என தனது பெயரை போடுமாறு கேட்டுக்கொண்டாராம். தனுஷ்-ம் அதற்கு மறுப்பே தெரிவிக்கவில்லை.
இதனால் கடுப்படைந்த ஸ்ரீகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் மனவேதனைக்கு உள்ளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி பாடகி சுசித்ரா பெயரில் வெளியான புகைப்படமும் டிடியின் திருமண வாழ்க்கையை புரட்டிப் போட்டதாக கூறபப்படுகிறது.