Friday, December 6
Shadow

தனுஷின் அழைப்பை நதியா ஏற்பாரா? மாட்டாரா?

உலகத்தில் ஆசை யாரை விட்டது? ஐயோ பாவம் நம்ம ராஜ்கிரணுக்குமா? பெரிதாக ஒன்றுமில்லை. நம்ம எவர்கிரீன் அழகி நதியாவுடன் நடிக்க வேண்டுமாம். ஆசையை அப்படியே மனதிற்குள் வைத்திராமல், உடனே தனுஷிடம் சொல்லியேவிட்டார்.

இந்த செய்திக்கு பெருசா முன்னோட்டம் தேவையில்லை. இருந்தாலும் நாலு வரியில் ஒரு நறுக் சுருக்! தனுஷ் முதன் முதலில் இயக்கவிருக்கும் படத்தில் ராஜ்கிரண்தான் ஹீரோ. தன் அப்பாவை இயக்குனராக்கிய அதே ராசியான கால்ஷீட்டால், தன்னையும் இயக்குனராக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட தனுஷுக்கு அவர் கேட்டவுடனேயே ஓ.கே சொன்னார் ராஜ்கிரண். இதுவரை வாங்காத பெருத்த சம்பளத்தை அவருக்கு வழங்கினார் தயாரிப்பாளர் தனுஷ்.

ஒரு ஷெட்யூல் ஷுட்டிங்கே முடிந்த நிலையில், ராஜ்கிரணுக்கு ஒரு திடீர் ஆசை வந்துவிட்டது. இந்தப்படத்தில் எனக்கு ஜோடியா நதியா நடிக்க வைக்க முடியுமா என்றாராம் தனுஷிடம். அதற்கப்புறம் சும்மாயிருப்பாரா சொல்லவா வேணும் தனுஷ்? உடனே நதியாவுக்கு போன் அடித்து விஷயத்தை கூறியிருக்கிறார்.

தமிழ்சினிமா அவருக்கு கொடுத்த மிக மோசமான அனுபவத்தால், யப்பா விட்டடேனா பார் என்று மும்பைக்கே ஓடிப்போன நதியா, தனுஷின் அழைப்பை ஏற்பாரா? மாட்டாரா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும் ?

கவுன்டவுன் ஸ்டார்ட்ஸ் ஆகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும் …

Leave a Reply