Sunday, October 6
Shadow

‘ஜேம்ஸ் பாண்ட்டிற்காக’ இசையமைத்து இருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா

பொதுவாகவே சமூக வலைத்தளங்களில், சில தனித்துவமான காணொளிகள் வைரலாக பரவுவதை நாம் பார்த்து இருக்கிறோம்…. ஆனால் தற்போது முதல் முறையாக ‘பான் பஹார்’ என்னும் ஒரு விளம்பர படம், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டு வருகிறது…அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது. ஒன்று, ஹாலிவுட் ‘ஜேம்ஸ் பாண்ட்’ புகழ் பியர்ஸ் பிராஸ்னன் இந்த விளம்பர படத்தில் நடித்திருப்பது…. மற்றொன்று, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இந்த விளம்பர படத்திற்கு இசையமைத்திருப்பது….

அறுபது வினாடிகள் ஓடக்கூடிய இந்த விளம்பர படத்தின் பின்ணணி இசைக்காக யுவன்ஷங்கர் ராஜா உபயோகப்படுத்தி இருக்கும் ‘வயோலா’ ரக இசை கருவியும், ‘கியூபா’ நாட்டின் பிரசித்தி பெற்ற ‘மாம்போ’ தாளங்களும், ரசிகர்களுக்கு ஒரு ‘ஜேம்ஸ் பாண்ட்’ படத்தை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. பிரபல ஹாலிவுட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னனிற்காக யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் செய்தி, தற்போது இந்திய திரையுலகினரின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply