Thursday, March 12
Shadow

ZEE5 வெளியிட்ட அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’ திரைப்பட டிரெய்லர் – பிப்ரவரி 20 முதல் பிரீமியர்!

ZEE5 வெளியிட்ட அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’ திரைப்பட டிரெய்லர் – பிப்ரவரி 20 முதல் பிரீமியர்!

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, புகழ்பெற்ற இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரில்லர் திரைப்படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளை பெற்றுள்ள இந்த படம், வரும் பிப்ரவரி 20 முதல் ZEE5 தளத்தில் இந்திய பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக வெளியாகிறது.மேலும், மும்பையில் நடைபெற்ற Kala Ghoda Art Festival நிகழ்ச்சியில் சிறப்பு ஏற்பாட்டுடன் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
கதை சுருக்கம்
மும்பையின் இருண்ட பின்னணியை மையமாகக் கொண்டு, நாயர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள ‘கென்னடி’, முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளியாக மாறிய கென்னடி உதய் ஷெட்டி என்ற நபரின் இரட்டை வாழ்க்கையை மையமாகக் கொண்டது.
பகலில் டாக்சி டிரைவராகவும், மறைவில் ஊழல் போலீஸ் கமிஷனர் ரஷீத் கானுக்காக கொலை ஒப்பந்தங்களை நிறைவேற்றுபவராகவும் வாழும் கென்னடி, தனது மகனை இழந்த துயரமும் சிதைந்த குடும்ப நினைவுகளும் அவரை தொடர்ந்து துரத்துகின்றன. கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முடியாத நகரத்தில், தன்னைத் தேடும் அவரது பயணம் இப்படத்தின் மையக் கருவாக அமைகிறது.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு
இந்த படத்தில் ராகுல் பட் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் சன்னி லியோனே, மோஹித் தகல்கர், மேகா பர்மன், அமீர் தல்வி, அபிலாஷ் தாப்லியால், கரிஷ்மா மோடி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்புகள் கென்னடியின் சிக்கலான மற்றும் இருண்ட உலகத்திற்கு பல அடுக்குகளைச் சேர்க்கின்றன.
திரைப்படத்தின் சிறப்பம்சங்கள்
‘கென்னடி’ டிரெய்லர் மௌனம், கோபம், உயிர்தப்புதல் ஆகிய உணர்வுகளை வலுவாக பிரதிபலிக்கிறது. வெடிச்சம்பவங்கள், அதிகார மையங்களின் சதி வலையங்கள் ஆகியவற்றுக்குள் சிக்கிக் கொள்ளும் கென்னடி, உண்மை, பழிவாங்குதல் மற்றும் மீட்சிக்கான கடினமான பயணத்தை மேற்கொள்கிறார்.

ஸ்டைலிஷ் ஆக்ஷன் காட்சிகளும், அனுராக் காஷ்யப்பின் தனித்துவமான நாயர் கதையாக்கமும் இணைந்து, தனிமை, நீதி மற்றும் வாழ்க்கைத் தேர்வுகளின் விலையை ஆராயும் ஆழமான திரையனுபவத்தை வழங்குகிறது.

இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியது
“‘கென்னடி’ நான் உருவாக்கிய மிக தனித்துவமான படங்களில் ஒன்றாகும். இந்த படத்தின் பயணம் நீண்டதாக இருந்தாலும், சர்வதேச திரைப்பட விழாக்களில் கிடைத்த பாராட்டுகள் இந்த படைப்பின் அர்த்தத்தை உணர்த்தின. வெளிப்படையாக வன்முறையைக் காட்டினாலும், உள்ளார்ந்த காயங்களுடன் வாழும் மனிதனின் உலகத்துக்குள் இந்த படம் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும். எந்த மாற்றமும் இன்றி, அதன் இயல்பான வடிவிலேயே ZEE5 மூலம் பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.

நடிகர் ராகுல் பட் கருத்து
“கென்னடி கதாபாத்திரம் எனக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தனிமை, கோபம் மற்றும் கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முடியாத மனிதனாக வாழ்வது மனதளவில் சவாலாக இருந்தாலும், அந்த அனுபவம் எனக்கு மிகுந்த திருப்தியை அளித்தது. திரைப்பட விழாக்களில் கிடைத்த வரவேற்பு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. இந்திய பார்வையாளர்களும் இந்த கதாபாத்திரத்தின் உணர்வுகளை அனுபவிப்பார்கள் என நம்புகிறேன்,” என்றார்.

நடிகை சன்னி லியோனே கூறியது
“‘கென்னடி’ திரைப்படம் நடிகையாக என்னை முற்றிலும் வேறொரு உணர்ச்சி உலகத்துக்குள் அழைத்துச் சென்றது. நான் நடித்த சார்லி கதாபாத்திரம் மர்மம், வலிமை மற்றும் நுட்பமான உணர்வுகளின் கலவையாகும். அனுராக் காஷ்யப்புடன் பணியாற்றிய அனுபவம், வார்த்தைகளைக் காட்டிலும் மௌனத்தின் சக்தியை புரிய வைத்தது. இந்த படம் எனக்கு மிகப்பெரிய சவாலை அளித்தது,” என்று தெரிவித்தார்.

வெளியீட்டு விவரம்
ஒரு விறுவிறுப்பான திரில்லர் அனுபவமாக உருவாகியுள்ள ‘கென்னடி’ திரைப்படம் பிப்ரவரி 20 முதல் ZEE5 தளத்தில் வெளியாகிறது.
டிரெய்லர் இணைப்பு:

 

 

ZEE5 பற்றி
ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாகும். 12 மொழிகளில் உள்ளடக்கங்களை வழங்கும் இந்த தளம், 4,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 1,800-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், 400-க்கும் மேற்பட்ட வெப் ஒரிஜினல் தொடர்கள், ஆயிரக்கணக்கான இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை வழங்குகிறது. பல சாதனங்களில் தடையற்ற பார்வை அனுபவத்தை வழங்கும் தொழில்நுட்ப வசதிகளுடன் ZEE5 செயல்படுகிறது.
மேலும் தகவல்களுக்கு ZEE5-ஐ Facebook, Instagram, LinkedIn மற்றும் X தளங்களில் பின்தொடரலாம்.

 

ZEE5 Releases Trailer of Anurag Kashyap’s ‘Kennedy’ – Premieres February 20

India’s leading video streaming platform ZEE5 has released the intense trailer of the much-anticipated thriller film ‘Kennedy’, directed by acclaimed filmmaker Anurag Kashyap. The film, which has received appreciation at several international film festivals, will premiere exclusively for Indian audiences on ZEE5 starting February 20.
The trailer was also unveiled at a special event held during the Kala Ghoda Art Festival in Mumbai.

Synopsis
Set against the dark backdrop of Mumbai, ‘Kennedy’ is a neo-noir action thriller that follows the double life of Kennedy Uday Shetty, a former police officer who turns into a contract killer.
By day, Kennedy works as a taxi driver, while secretly carrying out assassination assignments for the corrupt Police Commissioner Rashid Khan. Haunted by the tragic loss of his son and memories of his broken family, Kennedy is forced to confront his past while navigating through a city he cannot escape. His journey of self-discovery forms the emotional core of the film.

Cast and Crew
The film stars Rahul Bhat in the lead role, alongside Sunny Leone, Mohit Takalkar, Megha Burman, Amir Dalvi, Abhilash Thapliyal, and Karishma Modi in pivotal roles. Their performances add depth and layers to Kennedy’s fractured and shadowy world.
Film Highlights
The trailer reflects themes of silence, rage, and survival. As Kennedy gets trapped in a dangerous web of explosions, crime networks, and power struggles, he is pushed into a violent pursuit of truth, revenge, and redemption. Featuring stylish action sequences and Anurag Kashyap’s signature neo-noir storytelling, the film explores loneliness, justice, and the cost of uncompromising choices.

Director Anurag Kashyap Says
“‘Kennedy’ is one of the most unique films I have created. The journey of this film has been long, but every response we received at film festivals reaffirmed why I made this film. The trailer takes viewers into the world of a man who appears violent on the outside but is deeply wounded within. I am thrilled to bring the film to audiences on ZEE5 in its original, uncompromised form.”

Actor Rahul Bhat Says
“Playing Kennedy transformed me as an actor. He is lonely, angry, vulnerable, and constantly running from his past. Living in his silence and rage was emotionally exhausting but deeply fulfilling. The appreciation at film festivals gave me immense confidence, and I am excited for Indian audiences to experience his journey and pain.”

Actress Sunny Leone Says
“‘Kennedy’ pushed me into an entirely new emotional space as an actor. My character, Charlie, is mysterious, layered, and strong. Working with Anurag Kashyap taught me to celebrate silence as much as dialogue. This film challenged me in ways I have never experienced before, and I am grateful for that opportunity. I look forward to audiences experiencing this dark yet beautiful world.”
Release Details
Get ready for an intense thriller experience as ‘Kennedy’ premieres on ZEE5 from February 20.
Trailer Link:

About ZEE5
ZEE5, part of ZEE Entertainment Enterprises Limited (ZEEL), is one of India’s leading video streaming platforms. The platform offers content in 12 languages and features a vast library of over 4,000 films, 1,800+ television shows, 400+ web originals, thousands of music videos, and more than 135,000 hours of on-demand content. With a strong deep-tech infrastructure developed with global technology partners, ZEE5 ensures seamless viewing experiences across multiple devices.
Follow ZEE5 on Facebook, Instagram, LinkedIn, and X for more updates.