Monday, October 13
Shadow

ஆரவுக்கும் எனக்கும் என்ன உறவுமுறை தெரியுமா – ரைசா

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரவ் தேர்வாகி ரூ 50 லட்சம் காசோலையை பரிசாக பெற்று சென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ஆரவ்க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வெளியே வந்த ஆரவ் பிக்பாஸ் வீட்டில் இருந்த தனது சக போட்டியாளர்களை சந்தித்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டார்.

அண்மையில் இவர் மாடலிங் ரைசாவுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது. இவர்கள் இருவரும் டேட்டிங்கா சென்றதாக தகவல்கள் வெளியாகியது.

இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ரைசா விடம் நீங்கள் ஆரவ்வுடன் டேட்டிங்கா செல்வீர்களா என்று கேட்டதற்கு, “போக மாட்டேன். அவர் எனக்கு சகோதரர் மாதிரி” என ரைசா தெரிவித்து உள்ளார்.

Leave a Reply