Sunday, May 19
Shadow

800 – திரைவிமர்சனம் (Rank 2.5/5)

 

கிரிக்கெட் வீரர் தோணி வாழ்க்கை வரலாறு படமானவுடன் பல கிரிக்கெட் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் வெளிவர தொடங்கின அதன் வரிசையில் தான் இந்த 800 முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படம். 800 அவரின் 800 விக்கெட்கள் வீழ்த்தியவர் அதனால் படத்தின் டைட்டல் 800 அதோடு முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் அவரை துரத்திக் கொண்டே இருக்கும் ஒரு கேள்வி அவர் யார் என்கிற அடையாளம் தான்.

பொதுவாக முத்தையா முரளிதரனை பற்றிய மிக பெரிய சர்ச்ச்சை என்பது அவர் சிங்களரா இல்லை தமிழரா இல்லை கிரிக்கெட்காக தன் தமிழன் என்ற அடையாளத்தை விட்டுவிட்டாரா என்ற கேள்விக்கும் இந்த படம் பதிலளித்து இருக்கிறது.

இந்தப்படத்தில் முத்தையாவாக மாதுர் மிட்டல், நடித்து இருக்கிறார் முரளி மனைவியாக மஹிமா நம்பியார், மற்றும் நரேன் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.இந்த படத்தை ஸ்ரீபதி இயக்கியுள்ளார். சரி படத்தை பற்றி பார்ப்போம்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அப்படியே படமாக்கியிருக்கிறார் இயக்குநர். சிறுவனாக இருந்தபோதே முத்தையாவுக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்பட்டது, இலங்கையில் இருந்த தமிழர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திய 1977ம் ஆண்டு நடந்த பிரச்சனைக்கு பிறகு கிரிக்கெட் மீதான ஆசையால் அவர் உறைவிட பள்ளிக்கு சென்றது, பள்ளி, கல்லூரியில் முத்தையா சாதித்தது, இங்கிலாந்தில் அறிமுகமான தொடரில் அதிருப்தி அளித்தது, மீண்டு வந்தது, உலகக் கோப்பை வெற்றி, சட்டவிரோதமாக பந்தை வீசுவதாக எழுந்த சர்ச்சை, டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்தது, பாகிஸ்தான் டூரில் இலங்கை அணி சென்ற பேருந்து மீது நடந்த தாக்குதல், இறுதி போட்டியில் 800 டெஸ்ட் விக்கெட்டுகள் என்கிற சாதனை படைத்ததை காட்டியிருக்கிறார்கள்.

இரண்டாம் பாதியில் ஈழப் போராளிகளின் தலைவரை முத்தையா முரளிதரன் சந்திப்பதை காட்டுகிறார்கள். மாஸ்டர் என்று அழைக்கப்படும் அந்த தலைவராக நடித்திருக்கிறார் நரேன். எல்.டி.டி.இ. தலைவர் பிரபாகரனை மாஸ்டர் என்று தான் அழைத்தார்கள். அந்த சந்திப்பு தான் டென்ஷனே. தன் தாய் மண்ணாக பார்க்கும் நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என விரும்பும் ஒருவர். மற்றொருவரோ தன் ஆயுத போராட்டத்தால் தான் தன் மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என நம்புகிறார். இப்படி வெவ்வேறு கருத்து உடையவர்கள் சந்திக்கிறார்கள்.

எப்பொழுதுமே தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டியதை நினைத்து எரிச்சல் அடையும் முத்தையாவின் விரக்தியை மாதுர் மிட்டலின் நடிப்பில் ஓரளவுக்கு காண முடிகிறது.

மைதானத்தில் நடக்கும் காட்சிகள் அப்படியே வருகிறது. ஆனால் முத்தையாவின் இறுதி போட்டியில் கொஞ்சம் டிராமா கலந்து கனவுகளுடன் இருப்பவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதுடன், ஒரு திறமைசாலியின் சாதனையை தனித்து காட்டுகிறார்கள்.

மொத்தத்தில் படம் நமக்கு ஒரு நம்பிக்கையோ இல்லை எந்த ஒரு உணர்வை நமக்கு ஏற்படுத்த இல்லை

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த படம் அதுவும் முரளிதரன் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும்.