Monday, September 22
Shadow

‘Dude’ திரைப்படத்தின் ‘நல்லாரு போ’ பாடல் – ரசிகர்களின் இதயத்தை வருடிய மெலோடி!

‘Dude’ திரைப்படத்தின் ‘நல்லாரு போ’ பாடல் – ரசிகர்களின் இதயத்தை வருடிய மெலோடி!

திரை இசை ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘Dude’ திரைப்படம், தனது பாடல்களின் மூலம் ஏற்கனவே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

முதலாவது பாடலாக வெளிவந்த ‘ஊரும் பிளட்டும்’ எனும் ஹை எனர்ஜி பாடல், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது சிங்கிள் பாடலான ‘நல்லாரு போ’, உணர்வுகளை தொட்டெழுப்பும் ஆழமான மெலோடியாக ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்துள்ளது.

இந்தப் பாடலை சாய் அபயங்கர் இசையமைத்து, விவேக் ஏக்கம், காதல், பிரிவு ஆகிய உணர்வுகளின் கலவையோடு பாடல் வரிகளை எழுதியுள்ளார். திப்பு மற்றும் மோஹித் சௌஹான் இணைந்து குரல் கொடுத்த இந்த பாடல், “நமக்கு பிடித்தவர்கள் நம்மை விட்டு பிரிந்தாலும், எங்கிருந்தாலும் வாழ்க” என்ற கருவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகிறது.

பொதுவாக பிரேக்கப் பாடல்கள் கசப்பான அனுபவங்களை வெளிப்படுத்துவதாக இருக்கும். ஆனால் ‘நல்லாரு போ’ பாடல், அந்த பிரிவை முதிர்ச்சியுடன், மரியாதையுடன் கையாளுவதன் மூலம் மற்ற பாடல்களில் இருந்து தனித்துவமாகத் திகழ்கிறது. காதலி விட்டு பிரிந்த பின்னரும் அவளை குறை கூறாமல், மரியாதையுடன் விடைபெறும் ஹீரோவின் கண்ணோட்டம் இந்த பாடலில் பிரதிபலிப்பதால், குறிப்பாக பெண் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் வெளியிடப்பட்ட இந்த பாடல், மாணவர் சமூகத்தினரிடையே பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. உண்மையான காதல் மற்றும் உணர்வுகளை மதிக்கும் மனப்பான்மை இளைய தலைமுறையினரிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘Dude’ திரைப்படத்தை நவீன் யெர்னேனி மற்றும் வை. ரவி சங்கர் ஆகியோர், மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரில் மிகுந்த பிரம்மாண்டத்துடன் தயாரித்துள்ளனர். கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் மூத்த நடிகர் ஆர். சரத்குமார், ஹிருது ஹாரூன், ரோகிணி, ஐஸ்வர்யா சர்மா, டிராவிட் செல்வம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரைபடத்தின் கதைக்களத்துக்கேற்ப இசையமைக்கப்பட்ட இந்தப் பாடல்கள், ‘Dude’ படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளன. ரசிகர்கள் ஆவலுடன் படத்தின் திரையரங்க வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

“Nallaru Po” from Mythri Movie Makers’ Dude Wins Hearts with Soul and Sensitivity

Music in cinema often sets the emotional tone, and Dude, the upcoming film from Mythri Movie Makers, proves this yet again. After the high-energy hit Oorum Blood, the second single Nallaru Po has emerged as a soulful, emotional anthem that’s striking a powerful chord—especially with women listeners.

Composed by Sai Abhyankar and sung by Tippu and Mohit Chauhan, the track is a heartfelt blend of melody and meaning. Lyricist Vivek weaves words that speak of longing, love, and letting go, anchored in the poignant sentiment of “Engirunthaalum Vaazhga”, a blessing for someone to thrive, no matter where they are.

What truly sets Nallaru Po apart is its emotional maturity. Unlike songs that glorify bitterness after a breakup, this one chooses compassion. The hero doesn’t shame or blame the girl who leaves him, instead, he lets go with grace. This refreshing portrayal has resonated strongly with female audiences, many praising it for its non-toxic, respectful message.

The song’s launch among college students received an overwhelming response, solidifying its place as a chart-topper with real emotional depth.

Dude is written and directed by Keerthiswaran and produced by Mythri Movie Makers’ Naveen Yerneni and Y Ravi Shankar. Alongside Pradeep Ranganathan and Mamitha Baiju, the ensemble cast includes R. Sarath Kumar, Hridhu Haroon, Rohini, Aishwarya Sharma, and Dravid Selvam, among others.