Saturday, October 11
Shadow

இட்லி கடை – மனதை நெகிழ வைக்கும் சுவையான கதை! (Rank 4.5/5

இட்லி கடை – மனதை நெகிழ வைக்கும் சுவையான கதை!

தமிழ் திரையுலகில் எளிய கதைகளை உணர்ச்சியோடு சொல்லும் முயற்சிகள் எப்போதும் பாராட்டப்படுகின்றன. அந்த வரிசையில், ‘இட்லி கடை’ படம் குடும்ப பாசம், சொந்த ஊர் நினைவுகள், மரபு–மண் பற்றுக்கோட்டை எவ்வளவு வலிமையானது என்பதை அழகாக சொல்லுகிறது.

தனுஷ் நடித்த கதாபாத்திரம், தந்தை (ராஜ்கிரண்) கனவான இட்லிக்கடையை காப்பாற்றும் விதத்தில் ரசிகர்களை கண்ணீர்க்கும் சிரிப்புக்கும் அழைத்துச் செல்கிறது. தனுஷ் எப்போதும் போலவே இயல்பான நடிப்பால் பாராட்டை பெற்றிருக்கிறார். தந்தை–மகன் பிணைப்பு, ஊருக்கான பாசம் ஆகியவற்றை அவர் வெளிப்படுத்திய விதம் நெகிழ்ச்சியை தருகிறது.

ராஜ்கிரண் தந்தை கதாபாத்திரத்தில் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். சத்யராஜ் கார்ப்பரேட் உலகில் உறுதியான தந்தையாக வலுவாக திகழ்கிறார். அருண் விஜய் ஈகோவால் போராடும் மகனாக சிறப்பாக நடித்து தன் பங்கை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார்.

நித்யா மேனன் இயல்பான நடிப்பால் கதைக்கு நிறை சேர்த்திருக்கிறார். சமுத்திரக்கனி, பார்த்திபன், இளவரசு போன்றோரின் தோற்றங்கள் கதையின் வலிமையை கூட்டுகின்றன.

படத்தின் பாடல்கள் சுமுகமாக இருக்க, ஜி.வி. பிரகாஷ் வழங்கிய பின்னணி இசை ஒவ்வொரு உணர்ச்சியையும் உயர்த்துகிறது. ஒளிப்பதிவு சினிமாவை அழகாகப் பிடித்து, சொந்த ஊரின் மண்வாசனையை காட்சிகளில் உணர வைத்திருக்கிறது.

இயக்குநர் தனுஷ், தனது அப்பா கஸ்தூரி ராஜா பாணியில், உணர்ச்சி கலந்த கிராமத்து பட ஸ்டைலை மெருகேற்றி வழங்கியிருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் படத்திலேயே இப்படியொரு பூரணத்தன்மை கொண்ட படைப்பை ரசிகர்களுக்கு அளித்திருப்பது பாராட்டத்தக்கது.

‘இட்லி கடை’ படம், “எங்கு சென்றாலும் சொந்த ஊர்தான் சொர்க்கம்” என்பதையும், முன்னோர்களின் ஆசீர்வாதமும் ஊர் மக்களின் உறவும் வாழ்க்கையில் மிகப்பெரிய பலமாக இருப்பதையும் மிகுந்த அன்போடு சொல்லுகிறது.

 

மொத்தத்தில், ‘இட்லி கடை’ ஒரு சுவையான, உணர்ச்சி பூர்வமான, குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய சிறந்த திரைப்படம்.