Wednesday, October 8
Shadow

வெற்றிமாறன் சிலம்பரசன் இணையும் முதல் படத்தின் தலைப்பு அரசன்!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பாளர் என்றால் அது கலைப்புலி எஸ் தானு அவர்கள் என்பது உலகறிந்த விஷயம் அதோடு மட்டுமில்லாமல் தரமான படங்களும் வெற்றி படங்களை மட்டுமே குறிவைத்து தயாரிப்பாளர் தமிழ் சினிமாவில் இருக்கும் தலைசிறந்த இயக்குனர்களை வைத்து நல்ல கதை அம்சம் கொண்ட கமர்சியல் படங்களை கொடுத்து மிகப்பெரிய இடத்தை தமிழ் சினிமாவில் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் கலைப்புலி எஸ் தானு அவர்கள்.

 

இவரின் தயாரிப்பில் ஏற்கனவே வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் மிக அசுரன் என்ற படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கண்டனர் அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக சாதனை புரிந்த படம் என்றும் சொல்லலாம். மீண்டும் தானு அவர்களும் வெற்றிமாறனும் இணைகிறார்கள் ஆனால் இந்த முறை நாயகன் மாற்றப்பட்டுள்ளார்.

 

வெற்றிமாறனும் சிலம்பரசனும் முதல்முறையாக கலைப்புலி தயாரிப்பில் இணையும் படம். இந்தப் படத்திற்கு அரசன் என்று தலைப்பு வைத்துள்ளனர் இன்று அந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் ஒரு பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

தலைப்பே ரசிகர்களை அதிர வைக்கிறது என்றால் வெற்றி மாறனும் சிம்புவும் முதல் முறை இணைவதால் நிச்சயமாக இந்த படத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் தலைப்பு ரசிகர்களை பெரிய எதிர்பார்ப்புக்கு உண்டாக்கியுள்ளது