Sunday, April 19
Shadow

கலையரசனின் மேலும் ஒரு வெற்றி படைப்பு தான் “எய்தவன்”

வளர்ந்து வரும் நடிகர்களில் எல்லோராலும் முக்கியமாக கவனிக்கப்படும் நடிகர் என்றால் அது கலையரசன் என்று உறுதியாக சொல்லலாம் காரணம் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் மிகவும் சிறந்த படங்களாக தேர்ந்த்டுத்து நடிக்கிறார் என்றால் மிகையாகது இவரின் போன படம் அதே கண்கள் ஒன்றே சாட்சி என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு சிறப்பாக தன் பாத்திரத்தை தேர்ந்தெடுக்கிறார் என்று தான் சொல்லணும்.

அதே போல விரைவில் வெளியாக இருக்கும் படம் எய்தவன் படத்தின் கதையும் இயக்குனரையும் மிகவும் கவனமாக தேர்ந்துடுத்துள்ளர் என்பதுக்கு நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவே ஒரு உதாரணம் என்று சொல்லலாம் காரணம் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் காட்சிகள் ஒன்றே சாட்சி என்று சொல்லலாம் அந்த அளவுக்கு விருவிருப்பாக இருந்தது ட்ரைலர் அதே போல பாடல்களும் மிக அருமை என்று தான் சொல்லணும்.

படத்தின் கரு கல்வி பற்றியது இன்று கல்லூரிகளில் நடக்கும் அவலங்களை மிக வித்தியாசமாக சொல்லி இருக்கும் படம் தான் எய்தவன் இந்த படத்தி மிக முக்கிய கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி , கௌரவ் ,சான்ட டைடஸ், மற்றும் பலர் நடிப்பில் இந்த படத்தை சக்தி ராஜசேகரன் இயக்கியுள்ளார்.

“நகரின் முக்கிய இடத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. இதில் 16 பேர் பாதிக்கப்படுகிறார்கள். எல்லோரும் அந்த சம்பவத்தில் இருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். ஆனால் நாயகன், அந்த சம்பவத்துக்கான அம்பை எய்தவன் யார் என்று தேடுகிறான். கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளையும் சொல்லி இருக்கிறோம்.

காதல், காமெடி, ஆக்‌ஷன் கலந்து கமர்சியல் படமாக ‘எய்தவன்’ உருவாகி இருக்கிறது” என்றார்.

Leave a Reply