
சமீபத்தில் நம்மை எல்லோரையும் மிகவும் கவர்ந்த இல்லை மிரள வைத்த ஒரு கதாபாத்திரம் என்றால் அது ராஜமௌளியின் பாகுபலி படத்தில் வந்த ராஜா மாதா சிவகாமி கதாபாத்திரம் என்று தான் சொல்லணும் இதற்கு முன் ரம்யா கிருஷ்ணன் நடித்த கதாபாத்திரம் நீலாம்பரி நம்மை மிகவும் கவர்ந்தது அதற்கு அடுத்து இந்த ராஜா மாதா தான் எல்லோரையும் மிரள வைத்த பாத்திரம் என்று சொல்லணும்.
இந்த ராஜா மாதா சிவகாமியின் அதாவது ரம்யா கிருஷ்ணன் கணவர் தெலுங்கில் மிக பெரிய இயக்குனர் பல வெற்றி மற்றும் விருது படங்களை இயக்கியவர். இவர் வம்சி கிருஷ்ணா குறிப்பாக நாகர்ஜுனவை வைத்து பல வெற்றி படங்கள் கொடுத்தவர். இவர் சமீபத்தில் ஒரு நடிகையை ராஜமாதா சிவகாமியோடு ஒப்பிட்டு பேசியுள்ளார்.யார் தெரியுமா அந்த நடிகை.
தற்போது ‘நட்சத்திரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில், சாய்தரண் தேஜ் மற்றும் ரெஜினா நடித்துள்ளனர். படப்பிடிப்பின்போது ரெஜினாவின் நடிப்பைக் கண்டு வியந்த வம்சி கிருஷ்ணா, ‘சின்ன வயதில் என் மனைவியைப் பார்த்தது போலவே இருக்கிறது. விரைவில் நல்ல இடத்துக்குப் போவார்’ என்று தெரிவித்துள்ளார். ரெஜினா நடிப்பில் வெளியான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘மாநகரம்’ என இரண்டு படங்களுமே வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல பெயரைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக அவர் நடித்த ‘சரவணன் இருக்க பயமேன்’ இன்று ரிலீஸாகிறது.
