
மெர்சல் படம் பல இன்னல்களை சந்தித்து விட்டது அதன் உச்சகட்டம் தான் இன்று என்று சொல்லனும் டைட்டில் பிரச்சனை போய் படம் ரிலீஸ் பிரச்சனை போய் இன்று சென்சொர் பண்ணியதில் பிரச்சனை அந்த வழக்கு பிரச்சனை இன்று சந்திக்கபோகிறது
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளியாகி இருந்தது.
அட்லீ இயக்க தேனாண்டாள் தயாரித்து இருந்த இந்த படத்தில் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா, மருத்துவ ஊழல், இலவச மருத்துவம் போன்ற வசனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்ததன.
இதனால் படத்திற்கு எதிராக ஆளும் பா.ஜ.க கட்சியை சேர்ந்த தமிழிசை, எச்.ராஜா ஆகியோர் படக்குழுவினரையும் விஜயையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.
மேலும் படத்திற்கு எதிராக வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் படத்தின் சென்சாரை திரும்ப பெற வேண்டும் மேலும் படத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்வார்களா? அல்லது சென்சாரை திரும்ப பெற வேண்டும் என உத்தரவு பிறப்பிப்பார்களா? என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.