
சமீபகாலமாக மிகவும் பரப்பான விஷயம் என்னவென்றால் அது ஹிந்தி படமான பத்மாவதி தான் இந்திய சினிமாவை மிகவும் பாதிக்க வைத்துள்ளது என்று தான் சொல்லணும் மிக பிரமாண்ட செலவில் தயாரிக்கபட்டுள்ள இந்த படத்தை ரிலீஸ் பண்ண கூடாது எண்டு சொல்லிவந்தார்கள் இப்போது அதையும் மீறிய அராஜக செயலில் இறங்கியுள்ளனர் என்று தான் சொல்லணும்.
பிரபல நடிகையின் தலையை வெட்டினால் ரூ.5 கோடி பரிசு தொகை வழங்கப்படும், என்று சத்திரிய சமாஜ் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அந்த நடிகைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் வரலாற்று படமான ‘பத்மாவதி’ படத்திற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வரும் நிலையில், படத்தின் இயக்குநர் மற்றும் நாயகி தீபிகா படுகோனின் தலையை வெட்டினால் ரூ.5 கோடி பரிசு என்று அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாஅக உள்ள இப்படத்திற்காக, தீபிகாவை பலர் மிரட்டியதால், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
