Wednesday, January 14
Shadow

தபாங் -3 திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

சல்மான் கானின் தபாங் 3 நான்கு வெவ்வேறு மொழிகளில் திரைக்கு வந்துள்ளது, மேலும் பாய் ரசிகர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள் . தபாங் 3 இரண்டு புதிய விஷயங்களை சேர்த்துக் கொண்டுள்ளது- தபாங் 3 ஐ பிரபுதேவா இயக்கியுள்ளார், சல்மான் கான் இணைந்து தயாரித்துள்ளார். முதல் பகுதி தபாங் 2010 இல் வெளியிடப்பட்டது. இதை இயக்கியது அபிநவ் காஷ்யப். இதன் இரண்டாவது பகுதி அர்பாஸ் கான் தலைமையில் இருந்தது. படம் அதிரடி, நகைச்சுவை மற்றும் காதல் ஆகியவற்றின் முழுமையான தொகுப்பு. இதன் அதிரடி காட்சிகளும் ஒன் லைனர்களும் பார்வையாளர்களைக் கவர்ந்தன. தரவரிசை பட்டியலில் தபாங் 3 பாடல்கள் ஏற்கனவே முதலிடத்தில் உள்ளன. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்.

போலீஸ் அதிகாரியாக இருக்கும் சல்மான்கான், நேர்மையாகவும், ரவுடிகளிடம் இருந்து பறிக்கும் பணத்தை, போலீஸ்காரர்களுக்கு கொடுத்து வருகிறார். இந்நிலையில், பெண்களை கட்டாயப்படுத்தி தவறான தொழிலை செய்யச் சொல்லும் கும்பலை அடித்து நொறுக்குகிறார் சல்மான்கான்.

இந்த கும்பலுக்கு தலைவனாக கிச்சா சுதீப் இருப்பது சல்மான்கானுக்கு தெரிய வருகிறது. ஏற்கனவே இருக்கும் பழைய பகை காரணமாக இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. சல்மானுக்கும், கிச்சா சுதீப்புக்கும் இடையே இருக்கும் பழைய பகை என்ன? இவர்களின் மோதல் எப்படி முடிவு பெற்றது என்பதே படத்தின் மீதிக்கதை.

சுல்புல் பாண்டேவாக நடித்திருக்கும் சல்மான்கான், நடை, உடல் மொழி என அனைத்திலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக ப்ளாஷ்பேக்கில் சென்டிமென்ட்டாக நடித்து ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். காமெடியிலும், சண்டைக்காட்சிகளிலும், செம்ம ஸ்கோர் செய்திருக்கிறார்.

சல்மான்கானுக்கு ஏற்ற வில்லனாக நடித்திருக்கிறார் கிச்சா சுதிப். தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார். நாயகியாக வரும் சோனாக்‌ஷி சின்ஹா அழகு பதுமையாக வந்து செல்கிறார். மற்றொரு நாயகியாக வரும் சாய் மஞ்சிரேக்கர் அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

படத்தின் பிளஸ்: சல்மான் கான் நடிப்பு, பிரபுதேவாவின் இயக்கம்

மொத்தத்தில் ‘தபாங் 3’ சபாஷ் போடலாம்.