Wednesday, April 29
Shadow

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகும் மாநாடு படத்தின் அதிரடி அப்டேட்

கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அதாவது 2018-ம் ஆண்டில் சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் மாநாடு படம் உருவாகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாச்சு. அப்பவே 2019-ம் ஆண்டின் கோடைவிடுமுறைக்கு படம் திரைக்கு வரும் என்று ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், பூஜை கூட போடவில்லை.

பின்னர் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று மீண்டும் அறிவிப்பு வெளியானது. ஆனால் காலமும் நேரமும் கடந்து கொண்டே போவதால், மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவிச்சார்.

இப்படி மாநாடு படம் கைவிடப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் ‘மகா மாநாடு’ என்ற படத்தை தானே தயாரித்து, இயக்கி, நடிக்கவும் சிம்பு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் ரூ.125 கோடி செலவில் 5 மொழிகளில் படமாக்க உள்ளதாகவும் கூறப்பட்டுச்சு.

இதில் திடீர் திருப்பமாக கடந்த ஆண்டு இறுதியில் நடிகர் சிம்பு, மாநாடு படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாகவும், படப்பிடிப்புக்கு சரியாக வந்து ஒத்துழைப்பு அளிப்பதாக உத்தரவாதம் கொடுத்ததாலும் மாநாடு படம் மீண்டும் தொடங்கப்படு என்ன்னு அறிவிப்பு வெளியாச்சு.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பொங்கல் விழாவை முன்னிட்டு இந்தப் படத்தின் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ தகவல்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதன்படி இந்தப் படத்தில் நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இணைந்துள்ளார். மேலும் இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கருணாகரன் மற்றும் எவர் சிங்கிள் பிரேம்ஜி ஆகியோரும் மாநாடு படத்தில் சிம்புவுடன் நடிக்கின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியானதால் சிம்பு ரசிகர்கள் ஹேர்ப்பி ஆயிட்டாய்ங்க