
பெற்றோர்கள் இந்த தலைமுறையினரை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள்? பெற்றோர்களை மாணவ, மாணவிகள் எந்த கண்ணோட்டத்தில் நடத்துகிறார்கள் என்று காமெடியுடன் படம் சொல்லி கன்னடத்தில் ரிலீஸாகி ஹிட் ஆன படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார் புதுமுக இயக்குநர் ஹரி சந்தோஷ்.
ஆம்.. இவர் கன்னடத்தில் இயக்கிய காலேஜ் குமாரா படத்தின் தமிழ் ரீமேக்கை அறிமுக நடிகர் ராகுல் விஜய் மற்றும் நடிகை பிரியா வட்லமணி ஆகியோரைக் கொண்டு எடுத்து உள்ளார். இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபு மற்றும் அக்னிதேவி படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ள மதுபாலா நடிச்சுருக்கார்.
ஏ ஆர் ரஹ்மான் ஸ்டுடன்ஸ் மியூசிக்கில் தயராகி இருக்கும் காலாஜ் குமார் படத்தின் டீசர் நாளை வெளியாகுது
