
நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசை வந்து பல ஆண்டு காலம் ஆகிவிட்டது அதன் அடிபடியில் தான் மக்கள் இயக்கம் என்று ஆரம்பித்தார். அதன் சின்ன சின்ன அரசியல் நிகழ்வுகள் அவர் அப்பாவுடன் இணைந்து செயல்பட்டார் என்பது நாம் அறிந்த விஷயம் கடந்த சில நாட்களுக்கு முன் மோடி யின் கருப்பு பணத்தை பற்றியும் எந்த நடிகரும் வாய் திறக்தா நேரத்தில் இவர் மட்டும் தான் இந்த திட்டத்தால் என்பது சதவித மக்கள் பாதிக்கபட்டுளார்கள் என்று தைரியமாக கூறினார். இதன் அடிப்படையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் விரைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
தமிழக இடைத்தேர்தலில் நடிகர் விஜய்யின் கட்டுப்பாட்டில் இயங்கும் மக்கள் இயக்கம் திமுக-வுக்கு அதரவு அளிக்க உள்ளதாக தெரிகிறது.
கடந்த மே மாதம் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்ததாக கூறி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த இரு தொகுதிகள் உட்பட திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் சேர்த்து வருகிற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஆதரவு ரகசியமானதாக இருக்கும் என்றும், அந்தந்த தொகுதி தி.மு.க வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்கும்படி மக்கள் இயக்க மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவு போட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
