Tuesday, April 28
Shadow

திவ்யா என்ற பெயர் தமிழ் சினிமாவுக்கு ராசியான பெயர் சொல்பவர் காஜல் அகர்வால்

செல்லும்’, ‘செல்லாது’ என்ற கவலையில் தவித்து கொண்டு இருக்கும் மக்களுக்கு ஒரு சிறிய உற்சாகத்தை தரும் திரைப்படமாக உருவாகி இருக்கிறது ‘கவலை வேண்டாம்’. இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து இருக்கும் காஜல் அகர்வாலுக்கு, ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழை பொழிந்த வண்ணம் இருக்கின்றது. துறுதுறு வென இருக்கும் ‘திவ்யா’ கதாபாத்திரம் மூலம் இளம் ரசிகர்களின் மனதில் ஆணி அடித்தது போல் இறங்கி விட்டார் காஜல் அகர்வால். ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து, ‘யாமிருக்க பயமே’ புகழ் டீகே இயக்கி இருக்கும் கவலை வேண்டாம் திரைப்படம், 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த பொழுது போக்கு திரைப்படமாக உருவெடுத்து வருகிறது என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். தமிழ்நாடு முழுவதும் 380 திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் கவலை வேண்டாம் திரைப்படம் நான்கு முனைகளிலும் இருந்தும் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

“வாழ்க்கை சிறியது. அதை எப்போதும் கவலை இல்லாமல் வாழ வேண்டும் என்பது தான் எங்கள் படக்குழுவினரின் மனோபாவம்…..அதனுடைய பலன், தற்போது எங்களின் கவலை வேண்டாம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது…..பொதுவாகவே திவ்யா என்ற கதாபாத்திரம் ஒரு தமிழ் திரைப்படத்தில் இருந்தால், அந்த படம் மிக பெரிய வெற்றி பெறும் என்று ஒரு மூத்த தொழில் நுட்ப கலைஞர், நான் படப்பிடிப்பில் இருக்கும் போது என்னிடம் கூறினார்…..அதற்கு உதாரணமாக அவர் கூறிய சில திரைப்படங்கள் : மௌன ராகம், காதல் கொண்டேன்…. அந்த வகையில் தற்போது எனக்கும் இந்த திவ்யா கதாபாத்திரம் பாராட்டுகளை வாங்கி தந்த வண்ணம் இருக்கின்றது….. இப்படிப்பட்ட அற்புதமான கதையம்சத்தில் நடிக்க என்னை தேர்ந்தெடுத்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சாருக்கும், ஜீவா மற்றும் இயக்குநர் டீகே அவர்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்….. கதாநாயகன் – கதாநாயகி – இருவருக்கும் முக்கியத்துவம் தரக்கூடிய கதையை உருவாக்கி இருக்கிறார் டீகே. அதே நேரத்தில் படத்தின் நாயகன் ஜீவா சாருக்கும் என் நன்றி உரித்ததாகுக . தங்கள் ஆதரவையும், அன்பையும் தொடர்ந்து எனக்கு அளித்து வரும் ரசிகர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து. கொள்கிறேன்…. பல்வேறு கவலைகளில் மூழ்கி இருக்கும் மக்களை உற்சாகப்படுத்தும் ஒரு திரைப்படமாக எங்களின் கவலை வேண்டாம் இருக்கும்….” என்று உற்சாகத்தோடு கூறுகிறார் கவலை வேண்டாம் நாயகி காஜல் அகர்வால்.

Leave a Reply