Saturday, January 10
Shadow

பாசத்தை வலியுறுத்துகிறது ஆனந்த வீடு

மூவி மேநிலா க்கர்ஸ் தயாரிப்பில் உருவாக்கியுள்ளது ஆனந்த வீடு திருவேங்கடம் குடும்பம் அமைதியான குடும்பம் மகன் மகளுடன் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என வாழ்ந்து கொண்டிருக்கிறார் இந்த சூழ்நிலையில் சமூக விரோதிகளால் மகன் கொலை செய்யப்படுகிறான்.  அதோடு நில்லாமல் மகளையும்  கொலை செய்யப்போவதாக மிரட்டுகின்றனர் பாசமான மகளை காக்கும் முயற்சியில் ஈடுபடும் போது திடுக்கிடும் சம்பவங்கள் நடைபெறுகின்றன, பாசமான மகளை சமூக விரோதிகளிடமிருந்து காப்பாற்றுகின்றார என்பதன் பின்னணியில் உருவாகி உள்ளது  ஆனந்த வீடு,
…………..
சிவாஜிகணேசன் நதியா நடித்து வெளிவந்த அன்புள்ள அப்பா படத்திற்கு பிறகு தந்தை மகள் பாசத்தை வலியுறுத்தும் படமாக  ஆனந்த வீடு உருவாக்கப்பட்டுள்ளது, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சண்டை காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளது பாடல் காட்சிகள் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டது, படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி இசை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது மிக விரைவில் திரைக்கு வர உள்ளது,
கதை நாயகனாக சிவாயம். அறிமுக நாயகன் துர்கா பிரசாத். நாயகி  ககனதீபிகா சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் முக்கிய வேடம். தம்பா பாண்டியன் வரதன் மற்றும்  பலர் இசை கோபாலகிருஷ்ணன்,     பாடல்கள் ராஜ முனி, கதை வசனம் இயக்கம் சுகுமார்,