Sunday, May 19
Shadow

அநீதி – திரைவிமர்சனம் (ரசிகர்கள் நீதி கொடுக்க வேண்டும்)Rank 3.5/5

அநீதி – திரைவிமர்சனம்


எளியவர்களின் வாழ்க்கையையும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும் தொடர்ந்து தனது படங்களில் பதிவு செய்து வரும் இயக்குநர் வசந்தபாலன், இந்த படத்திலும் எளியவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, உழைப்பாளிகளுக்கு முதலாளிகள் இழைக்கும் அநீதிகள் பற்றி அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

சிறு வயதில் நடந்த கசப்பான சம்பவத்தால் மன ரீதியாக பாதிக்கப்பட்டும் நாயகன் அர்ஜுன் தாஸ், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, நாயகி துஷாரா விஜயனுடனான காதல் அவரது மனநிலையை மாற்றி அவரை சகஜ நிலைக்கு கொண்டு வரும் நிலையில், சூழ்நிலை காரணமாக அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன், ஒரு குற்ற சம்பவத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். அதனால் அவர்களது வாழ்க்கை திசை மாறுவதோடு, எளியவர்களுக்கு சட்டம் எப்படி அநீதி இழக்கப்படுகிறது என்பதை சொல்வது தான் ‘அநீதி’ படத்தின் கதை.

இதுவரை வில்லன் கதாபாத்திரங்களை நடித்து வந்த அர்ஜுன் தாஸ் முதல் முறையாக நாயகன் இந்த நாயகன் அவதாரத்தை அவர் எப்படி செய்திருக்கிறார் என்று பார்க்கலாம். நாயகனாக நடித்திரும் அர்ஜுன் தாஸ், பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை மிக கவனமாக கையாண்டு கவனம் ஈர்க்கிறார். எளிய மக்களை இழிவாக நடத்துபவர்களை பார்த்தால் அவர்கள் மீது கொலைவெறி கொள்வது, யாருடனும் பேசாமல் இருக்கமாக இருப்பது, காதலிக்க தொடங்கிய உடன் தனது மனநிலையில் நடைபெறும் மாற்றத்தை வெளிப்படுத்துவது, காதலி சொல்லால் கலங்கி நிர்பது என அனைத்து இடங்களிலும் மிக சிறப்பாக நடித்திருப்பவர், தனது அப்பாவை நினைத்து அழும் காட்சியில், பார்வையாளர்களையும் கண் கலங்க வைக்கிறார். ஆக்‌ஷன் படங்களை மட்டும் இன்றி, காதல் மற்றும் எமோஷனல் படங்களையும் தன்னால் சிறப்பாக கையாள முடியும் என்பதை அர்ஜுன் தாஸ் இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.

துஷாரா விஜயன் நம் வீட்டு பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருக்கிறார். நடிப்பில் ஒவ்வொரு படத்திலும் தான் ஒரு சிறந்த நடிகை கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிக்கக்கூடிய நடிகை என்பதை நிரூபித்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக அர்ஜுன் தாஸ் உடன் மிகச்சிறந்த நடிப்பை எதார்த்தமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வனிதா விஜயகுமாருக்கு இது ஒரு மிகப்பெரிய கம்பா என்றே சொல்லலாம் பார்க்க மட்டும் நான் வில்லு இல்லை நடிப்பிலும் மிகப்பெரிய வில்லை என்பதை இந்த படம் மூலம் நிரூபித்திருக்கிறார் அர்ஜுன் தாஸுக்கு கொடுத்திருக்கும் ஒரு வில்லியாகத்தான் இந்த படத்தில் வளம் வந்திருக்கிறார் இயக்குனரின் எண்ணம் அறிந்து கதையின் ஓட்டம் புரிந்து தெளிவான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார்.

காளி வெங்கட், சாந்தா தனஜெயன், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, நடிப்பிலும் முத்திரை பதித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எட்வின் படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம் இயக்குனரின் மனமறிந்து கதைக்கேற்ப ஒரு மிகச்சிறந்த ஒரு ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

படத்தின் மிகப்பெரிய பலம் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் திரைக்கதை ஏற்ப பின்னல் இசையில் மிரட்டி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் அதேபோல இனிமையான பாடல்களையும் கொடுத்து இயக்குனருக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார்.

உழைக்கும் மக்களுக்கு முதலாளிகளால் ஏற்படும் அநீதியை ஒரு அற்புதமான திரைக்கதை மூலம் இயக்குனர் நமக்கு கொடுத்திருக்கிறார். அதற்கு என்ன தீர்வு என்றும் இயக்குனர் வசந்த் பாலன் சொல்லி இருக்கிறார் அநீதி படம் மூலம் தொடர்ந்து வசந்தபாலன் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய முத்திரை பதித்தவர் வருகிறார் அதன் மூலம் இந்த படத்திலும் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஏழைகளுக்கு அவ்வளவு சீக்கிரமாக நீதி கிடைப்பதில்லை என்பதை ரொம்ப அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன்
முதல் பாதையில் திரைக்கதைவில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும் இரண்டாம் பாகம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது குறிப்பாக அர்ஜுன் தாஸ் யார் என்ற பின்னணி படத்திற்கு மிகப்பெரிய பலத்தை சேர்த்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் அநீதி ரசிகர்களுக்கு ஒரு நீதி என்று தான் சொல்ல வேண்டும் எனவே ரசிகர்கள் திரையரங்கில் சென்று நீதி கொடுக்க வேண்டும்.