Sunday, May 19
Shadow

ஆகஸ்ட் 16 1947 – திரைவிமர்சனம் (Rank 4/5)

நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு சிறந்த பீரியட் படம் என்று சொன்னால் அது ஆகஸ்ட் 16 1947 படத்தின ஒவ்வொரு காட்சியும் பலம் சேர்க்கும் அளவுக்கு அர்புதமான திரை கதை மூலம் இயக்குனர் பொன் குமார் நம்மை கவர்ந்து இருக்கிறார். படத்தினn இயக்குனர் மெனகெடல் ஒவ்வொரு காட்சியிலும் நமக்கு தெரிகிறது. படத்தின் இயக்குனர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம் என்று தான் சொல்லணும் .

 

செங்காடு மலை மேல் உள்ள கிராமம் இந்த கிராமத்தில் அடிபடி வசதி இல்லாத கிராமம சுதந்திரம் கிடைக்க நான்கு நாட்களுக்கு முன் நடக்கும் கதையாக இயக்குனர் இந்த கதை களம் அமைத்து உள்ளார். கிராமத்து மக்களால் பழிவாங்க பட்ட கெளதம் கார்த்திக் கிராமத்தை மக்களை அடிமையாக வைத்து பருத்தி நெய்யும் ஆங்கிலேயன் அவனுக்கு ஒரு மகன் அவன் பெண் பித்தன் கிராமத்தில் உள்ள கன்னி  பெண்களை கற்பை சூரையாடுபவன். இவனிடம் இருந்து கிராமத்து ஜாமீன் தன் பெண் இறந்து விட்டதாக நாடகம் ஆடி இந்த பெண்ணை மறைமுகமாக வளர்க்கிறார். இந்த உண்மை கெளதம் கார்த்திக் மற்றும் புகழ் இருவருக்கும்  மட்டும்  தான் தெரியும் ஜாமீன் பெண்ணை ஒருதலையாக காதலிக்கும் கெளதம் இவருக்கு உதவி செய்யும் நபர் புகழ் ஒரு சந்தர்ப்பத்தில் வில்லனுக்கு இப்படி ஒரு பெண் இருக்கிறாள் என்று அந்த ஆங்கிலனக்கு தெரிய ஜாமீனை அழைத்து என் மகனுக்கு உன் பெண்ணை இன்று கொடு என்று சொல்ல ஜமீன் சொத்துக்கும் பதவிக்கும் ஆசை பட்டு சரி என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து வந்து தன் மகளை கொன்று விடுவோம் இல்லை அவனிடம் மாட்டி சின்னா பின்னம் ஆகிவிடுவாள் என்று கொள்ள நினைக்கும் போது அவளை காப்பாற்றி கொண்டு செல்கிறார் கௌதம் கார்த்திக் இந்த பெண் அந்த ஆங்கிலேயுடம் சிக்கினாலா இல்லை கௌதம் கரம் பிடித்தாலா என்பது தான் மீதி கதை

 

படத்தின் மொத்த பாரத்தையும் இயக்குனர் சுமந்து உள்ளார். இயக்குனர் மனம் அறிந்து படத்திலl நடித்த அனைவரும் இயக்குனருக்கு பலம் சேர்த்து உள்ளார்கள் குறிப்பாக கெளதம் புகழ் நாயகி இந்த மூவரும் தன் முழு திறமையை பிரதி பலித்தது உள்ளார்கள்.

கிராமத்து மக்களாக நடித்து இருக்கும் அனைவரும் படத்தின் கூடுதல் பலம் என்று தான் சொல்லணும்

படத்தினn மேலும் பலம் ஒளிப்பதிவு மற்றும் இசை ஷான் இசையில் பாடல்களும் சரி குறிப்பாக பின்னணி இசை படத்தின் கூடுதல் பலம்

மொத்தத்தில் அனைவராலும் போற்ற வேண்டிய ஒரு படம் என்று சொன்னால் மிகையாகாது.