Sunday, March 23
Shadow

பேபி பேபி – திரை விமர்சனம் ரங்க் 3.5/5

இந்த வார திரைப்படங்களில் ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு வித்தியாசம் என்று தன் சொல்ல வேண்டும் புதுவிதமான கலை அம்சம் கொண்ட படங்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் பேபி பேபி இந்த படமும் ஒரு வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படம் என்று சொல்லலாம்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜெய் நடித்திருக்கும் படம் யோகி பாபு, சத்யராஜ் ,இளவரசு ஆனந்த்ராஜ், பிரயாக் நகரா ஶ்ரீ தான்யா, மொட்டை ராஜேநதிரன், சிங்கம்புலி, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடிப்பில் இமான் இசையில் பிரதாப் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் நகைச்சுவை படம் தான் பேபி பேபி

விமான நிலையத்தில் தான் சொந்த ஊருக்கு செல்ல இருக்கும் சமயத்தில் யோகி பாபு மற்றும் ஜெய் தம்பதியினர் குழந்தைகள் மாறுகிறது இந்த குழந்தைகள் எப்படி மாறுகிறது மீண்டும் இந்த குழந்தைகள் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை கரு.

ஜெய் தமிழ் சினிமாவில் நல்ல நடிகர் என்றவர் அந்தஸத சரியாக செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இந்தப் படத்திலும சிறப்பாக ஒரு நகைச்சுவை நாயகனாக நடித்திருக்கிறார். படம் முழுவதும் அவரும் யோகிபாவும் அடிக்கும் லூட்டி மிக அற்புதம் அதே சமயத்தில் குழந்தை காணாமல் போனவர்கள் இடத்தில் தன் சென்டிமென்ட் ஆன நடிப்பை நம்மை நெகிழ வைக்கிறார்

பிரயாக் நகரா படத்தின் நாயகி ஒரு பொம்மை போல வந்து விட்டு பொம்மை போலவே போகிறார் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான பாவனையை வெளிப்படுத்துகிறார்

யோகி பாபு எப்போதும் போல இந்த படத்திலும் நகைச்சுவை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். நிறைய இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிற நிறைய இடங்களில் நம்மை நெகிழவும் வைத்திருக்கிறார் இயக்குனரின் எண்ணம் அறிந்து நடித்திருக்கிறார்.

ஸ்ரீதன்யா நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் யோகி பாபு ஜோடியாக இணைந்திருக்கிறார் காமெடியிலும் சரி சென்டிமென்ட் காட்சிகளிலும் சரி தன் குழந்தையை நினைத்து தவிக்கும் காட்சிகளிலும் சரி நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்

சத்யராஜ் ஜெய்யின் அப்பாவாக ஒரு பண்ணையாராக நடித்து இருக்கிறார் தன் குடும்பத்திற்கு ஆண் வாரிசு தான் வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் இப்படியான ஒரு கதாபாத்திரத்தில் மிக சரியான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அதேபோல படத்தில் நடித்த ஒவ்வொருவரும் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள குறிப்பாக ஆனந்தராஜ் சிங்கம்புலி மொட்டை ராஜேந்திரன் இவர்களின் நகைச்சுவை நம்மை சிரிக்க வைக்கிறது.

இயக்குனர் பிரதாப் முதல் படத்தில் முத்திரை பதித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் நகைச்சுவையோடு மூடநம்பிக்கையின் அறியாமையையும் மிக அழகாக சொல்லி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் பேபி பேபி அழகு