சிறிய இடைவெளிக்கு பிறகு ஜீவா நடிக்கும் படம் பிளாக் அவருடன் , ப்ரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, யோகி ஜேபி, ஷா ரா, ஸ்வயம் சிதா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தை கே .ஜி.பாலசுப்பிரமணி இயக்கத்தில்வெளிவந்து இருக்கும் பிளாக்
கதைக்குள் போகலாம் …
ஈ சி ஆர் பகுதியில் கடற்கரை ஓர பகுதியில் வீடு ஒன்றை வாங்குகின்றனர் ஜீவா – ப்ரியா பவானி சங்கர் தம்பதியினர்.அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் பெரிதாக இல்லாத நிலையில், தங்களது வீட்டில் சில நாட்கள் தங்க முடிவெடுக்கின்றனர்.அன்று இரவு வீட்டிற்குள் செல்கின்றனர் இருவரும். உள்ளே சென்றதும் சில அமானுஷ்யங்கள் அங்கு நடக்கிறது.
வீட்டை விட்டு வெளியேயும் வர முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல், தங்களது உருவம் கொண்ட இருவர் வீட்டிற்குள் இருப்பதை அறிகின்றனர்.அதன்பிறகு இந்த கதையில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
வழக்கமான நடிப்பையே இப்படத்திலும் கொடுத்திருக்கிறார் ஜீவா. பதட்டம், குழப்பம் என கதாபாத்திரத்தின் மனநிலையை கனக்கச்சிதமாக கையில் எடுத்துக் கொண்டு அந்த கேரக்டரை மிகவும் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.
ஜீவாவின் நடிப்பிற்கு ஈடுகொடுக்கும் விதமாக தனது கேரக்டரையும் அருமையாக செய்து முடித்திருக்கிறார் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். கண்களால் பல இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை இரண்டும் படத்திற்கு மிகப்பெரும் பலம் தான். அதிலும், இரவு நேர காட்சியில் ஒளிப்பதிவை கட்சிதமாக கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
மிக குறைவான நடிகர்களை வைத்துக் கொண்டு தனது கதை மற்றும் திரைக்கதையின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர். சில கேரக்டரை மட்டுமே வைத்து ஒரே வீட்டிற்குள் கதை பயணித்துயுள்ளார். திரைக்கதையில் கொஞ்சம் கவனம்செலுத்தி இருக்கலாம்
மற்றபடி, ஒருமுறை பார்க்கலாம்
பிளாக் – விறுவிறுப்பான ஹாரர்