Sunday, May 19
Shadow

பொம்மை நாயகி – திரைவிமர்சனம் (சமூகத்தின் சவுக்கடி) Rank 4/5

தமிழ் சினிமாவில் சமூக நல அக்கறையுடன் எடுக்கபடும் படங்கள் என்பது குறைவு காரணம் அதற்கு viyaabaram இல்லை என்ற ஒரு கண்ணோட்டம் ஆனால் நீலம் புரொடக்ஷன் எடுக்கும் படங்கள் அனைத்தும் சமூக அக்கறை கொண்ட படங்களாக மட்டும் தான் இருக்கும். அதன் அடிப்படையில் நீலம் தனது அடுத்த படைப்பான பொம்மை நாயகி படமும் சமூக அக்கறை கொண்ட படம் தகப்பன் பொண்ணு பாசத்தை மையமாக கொண்டு எடுக்கபட்டுள்ள படம் அதோடு பாலியல் கொடுமைக்கு ஆளான ஒரு ஒடுக்கப்பட்ட குடும்பத்துக்கு சமுதாயத்தில் எத்தனை இடையூறுகள் என்பதை சொல்லும் படம் தான் பொம்மை நாயகி

கடலூரில் வசிக்கும் யோகி பாபு அன்பான மனைவி அழகான திறமையான மகள் எல்லோரும் பொறாமை படும் குடும்பம் ஆனால் ஏழ்மையான ஒடுக்கப்பட்ட குடும்பம் இந்த சூழ்நிலையிலும் நேர்மையாக வாழும் யோகி பாபு இவர் அண்ணன் அருள் தாஸ் இவர் வசதி வாய்ப்பு வாய்ந்த அரசியல்வாதி இருவரும் அண்ணன் தம்பி இருந்து இருவருக்கும் தாய் வேறு அண்ணன் அருள் தாஸ் உயர்ந்த ஜாதி தாய்க்கு பிறந்தவர். இதனால் இவர் யோகி பாபுவை மிகவும் கீழ்த்தரமாக நடத்துவார். ஒரு கட்டத்தில் கோவில் திருவிழாவில் ஊர் மக்கள் கொண்டாட்தில் இருக்கும் போது யோகி பாபு மகள் ஶ்ரீமதியை ஊரின் முக்கிய பிரமுகர்கள் பாலியல் பலாதகாரத்திற்கு முயற்சிப்பார்கள் இதில் இருந்து யோகி பாபு தன் மகளை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ப்பார். இங்கு இருந்து மேல்தட்டு மக்களின் சர்வாதிகாரம் ஆரம்பிக்கிறது இவர்களுக்கு ஆதரவாக இருக்கு யோகி பாபு சொந்த அண்ணன் காரணம் தன் அரசியல் வாழ்க்கைக்கு பயந்து அவரும் குற்றவாதிகளுக்கு ஆதரவு இதையும் மீறி இவர் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கிராரா என்பது தான் மீதி கதை

நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த நம் யோகி பாபு இதில் நம்மை மிகவும் யதார்த்தமான நடிப்பில் நம்மை கலங்க வைக்கிறார். படத்தில் பல இடங்களில் நம்மை நடிப்பில் கவருகிறார் சில இடங்களில் நம் கண்களை குளமாக்கிறார் . நிச்சயம் இவருக்கு தேசிய விருது காத்திருக்கிறது.

மனைவியாக நடித்து இருக்கும் சுபத்திரா தமிழுக்கு கிடைத்த மிக சிறந்த நடிகை என்பதில் துளியும் அச்சம் இல்லை

சூப்பர் சிங்கரில் நாம் பார்த்து ரசித்த ஶ்ரீமதி யோகி பாபு மகளாக நடித்து இருக்கும் குழந்தை தான் சிறந்த பாடகி மட்டும் இல்லை தான் சிறந்த நடிகையும் என்று நிரூபித்துள்ளார்.

இயக்குனர் ஷான் ஒவ்வொரு காட்சியிலும் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார். கண்ணாடி மாதிரியான கதையை கையாண்டுள்ளார். ஆனால் எந்த இடத்திலும்.உடையாமல் சிதையாமல் கொடுத்துள்ளார். ஒரு பாலியல் பாலாத்கார கதையை மிகவும் நேர்த்தியாக யதார்த்தமாக கொடுத்துள்ளார் இயக்குனர் ஷான். முதல் படம் என்பது போல இல்லாமல் ம கவும் அனுபவசாலி இயக்குனர் படம் போல பார்க்கும் போது இருந்தது.

ஒளிப்பதிவு அதிசயராஜ் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் இயக்குனரின் உணர்வை புரிந்து கதைக்கு ஏற்ப ஒளிப்பதிவு அதே போல மிக பெரிய பலம் இசையமைப்பாளர் k.s. சுந்தரமூர்த்தி பின்னணி இசையும் சரி பாடல்களும் நம்மை மெய்மறக்க வைக்கிறது.

படத்தில் நடித்த அனைவரும் படத்துக்கு பலம் என்று சொன்னால் மிகையாகாது குறிப்பாக அருள் தாஸ் KPY ஜெயசந்திரன் பாடகி ராக் ஸ்டார் ருக்மணி பாட்டி இவர்கள் படத்துக்கு மேலும் பலம். அதே போல கடலூர் கிராமத்து மக்கள் பலர் நடித்துள்ளனர் என்பதை விட வாழ்ந்துள்ளனர்.

மொத்ததில் பொம்மை நாயகி நம் சமூகத்தின் நாயகி