Monday, May 13
Shadow

பம்பர் – (பார்க்க வேண்டிய ஒரு படம்) Rank 4/5

பம்பர் திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் அறம் பேச வந்திருக்கும் திரைப்படம் பம்பர் திரைப்படங்கள் வழியாக அவ்வப்போது நல்ல கருத்துக்களை சொல்லிக் கொண்டுதான் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் மிகச் சிறந்த திரைப்படமாக அமைந்திருக்கும் படம்  பம்பர்உள் இந்தப் படத்தில் வெற்றி, சிவானி நாராயணன், ஜி.பி முத்து ,ஹரிஷ் பெராடி, கவிதா பாரதி தங்கதுரை அருவி மதன், பிரம்மாச்சி ,நியாஸ் ,மற்றும் பலர் நடிப்பில் செல்வகுமார் இயக்கத்தில் வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவில் கோவிந்த் வசந்த் இசையில் வெளிவந்திருக்கும் படம் தான் பம்பர்.

படத்தின் ஒன் லைன் லாட்டரி சீட்டு பம்பர் பரிசு

நாயகன் வெற்றி தூத்துக்குடியில் தூத்துக்குடியில் ரவுடித்தனம் செய்து கொண்டு முடித்துவிட்டு ஊர் ஊர் சுற்றுவது வரும் வாலிபர் அவருக்கு நண்பர்கள் மூன்று பேர் இந்த நாள்தோறும் சேர்ந்துதான் தூத்துக்குடியில் பல அராஜகம் செய்து வருவார்கள் பணத்துக்காக என்ன வேணும் செய்யக்கூடிய இந்த நால்வர் இவர்களுக்கு துணையாக போலீஸ் ஏட்டு ஆக இருக்கும் கவிதா பாரதி புதிதாக வரும் அசிஸ்டன்ட் கமிஷனர் அறிவு மதன் இவர்களிடம் இந்த நால்வர் இட்லி ஸ்டில் வருகிறார்கள் இவர்களை கைது செய்ய துரத்தும் போது இவர்கள் ஒரு ஐயப்பன் கோவிலில் சென்று விடுகிறார்கள் அங்கு சென்று இவர்களை கைது செய்யும் முயற்சிக்கும் போது அங்க இருக்க ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்று சத்தம் போடுகிறார்கள் அவரிடம் அருவி மகனிடம் இருந்து தப்பிக்க சபரிமலைக்கு மாலை போட்டுக் கொள்கிறார்கள். முறைப்படி விரதம் இருந்து சபரிமலைக்கு செல்கிறார்கள் அங்கு ஹரிஷ் போராடி லாட்டரி விற்கும் ஒரு இஸ்லாமியர் அவரிடமிருந்து ஒரு லாட்டரி பம்பர் லாட்டரி சீட்டு வாங்குகிறார். வெற்றி ஆனால் அந்த லாட்டரி சீட்டை அங்கே போட்டுவிட்டு செல்கிறார் அந்த லாட்டரி சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பம்பர் பரிசு அளிக்கிறது. இந்த லாட்டரி சீட்டு இந்த பரிசு அவருக்கு கிடைத்ததா அதை எப்படி கிடைத்தது என்பதை மீதி கதை.

படத்தின் இயக்குனர் செல்வகுமாரை நிச்சயமாக பாராட்ட வேண்டும் . காரணம் ஒரு நல்ல கதை அதற்கேற்ப மிக வித்தியாசமான திரைக்கதை அதில் அற்புதமான ஒரு சமூக சிந்தனை ஒரு மனித நேயம் மனிதாபிமானம் இவை அனைத்தையும் கொண்ட ஒரு படம்தான் பம்பர் நேர்மை மனசாட்சி என்பது மதத்துக்கும் அப்பாற்பட்டது மனித நேயமே என்று ஜெயிக்கும் என்றும் மிகச் சிறப்பாக இந்த படத்தின் சொல்லியிருக்கிறார் இயக்குனர் செல்வகுமார். முதல் பாதி திரைக்கதை கொஞ்சம் சோபித்தாலும் இரண்டாம் பாகம் திரைக்கதை நம்மளை மிகவும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் செல்வகுமார் காட்சிக்கு காட்சி நம்மை ரசிக்க வைக்கிறார் கைதட்ட வைக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் அதோடு நம்மை சிந்திக்கவும் வைக்கிறார். முழு படத்தையும் இயக்குனரே தாங்கி இருக்கிறார் என்று சொல்லலாம்.

ரவுடியாக வரும் நாயகன் வெற்றி எப்போது வரும் இந்த படத்தில் வந்து போகிறார் எல்லா படத்திலும் ஒரே முக பாவனை ஒரே நடிப்பு காட்சிக்கும் கதைக்கும் ஏற்ப எப்பொழுது இவரை மாற்றிக்கொள்வார் என்று தெரியவில்லை அப்படி மாற்றிக் கொண்டால் நிச்சயமாக இவருடைய படங்கள் மிகச்சிறந்த படங்களாக வரும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை நல்ல கதையை தேர்ந்தெடுக்கும் வெற்றி நடிப்பையும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்.

சிவானி நாராயணன் நீண்ட இடைவெளிக்குப்பின் பல போராட்டத்துக்குப் பின் அவருக்கு கிடைத்திருக்கும் படம் ஏதோ வந்து போகும் என்ற நாயகியாக இல்லாமல் கொஞ்சம் அதைக் கேட்ப பலமான நாயகியாக தான் இவர் வருகிறார் கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தி இருக்கிறார் என்றும் சொல்லலாம். இதற்குப் பிறகு இவருக்கு நல்ல படங்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று சொன்னால் அது ஹரிஷ் வராது இவர் இல்லை என்றால் இந்த படத்திற்கு உயிர் கிடைத்திருக்குமா என்பதை ஒரு கேள்விக்குறி இந்த படத்தின் கதாபாத்திரத்தை அற்புதமாக புரிந்து கொண்டு மிக சிறந்த கதை மிக சிறந்த நடிப்பில் இந்தப் படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் ஒரு இஸ்லாமியன் எப்படி இருப்பான் அது குறிப்பாக ஒரு ஏழை இஸ்லாமிய எப்படி இருப்பான் என்பதை வாழ்ந்து காண்பித்துள்ளார் இந்த படத்தில் இயக்குனர் எந்த விதத்தில் இவரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை ஆனால் இந்த கதாபாத்திரத்தில் இவரை தவிர வேற யாரையும் யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை அந்த அளவுக்கு மிக சிறப்பான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார் இவரை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கு மிகப்பெரிய ஒரு பாராட்டையும் கண்டிப்பாக தெரிவிக்கலாம்

அதேபோல படத்தில் நடித்த அருவி மதன் கவிதா பாரதி வெற்றியின் நண்பர்களாக வருவார்கள் அனைவருமே மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்

 

படத்திற்கு மேலும் பலம் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் இவர் இசையில் எல்லா அனைத்து பாடல்களும் மிக அற்புதமாக உள்ளன குறிப்பாக ஐயப்பனை பற்றி கூறும் பாடல் மிகவும் அற்புதமாக உள்ளது இந்த வருடம் ஐயப்பன் சீசனில் இந்த பாடல் மிகவும் பிரபலமடையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை

 

நேர்மை வாழ்க்கையில் என்றும் தோற்காது நேர்மைக்கு கிடைக்கும் பரிசு நிச்சயமாக மிகப்பெரிய பம்பர் என்று தான் இறைவனின் நீதி அந்த இறைவனின் நீதியை தான் இந்த படத்தில் மிக அற்புதமாக திரைக்கதையாக அமைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் நிச்சயமாக இயக்குனரை கண்டிப்பாக நம்ம பாராட்டவே ஆக வேண்டும் அனைவரும் குடும்பத்துடன் இந்த படத்தை பார்க்க வேண்டும்