
எழுதியும் இயக்கியதும் – மோகித் ராம்சந்தானி
நடிகர்கள் – ஆரி லோபஸ், ரெனாட்டா வகா, அல்ஃபிரெடோ காஸ்ட்ரோ, பவுலினா கைடான் உள்ளிட்டோர்
ஒளிப்பதிவு – அலெஹாண்ட்ரோ சாவேஸ்
இசை – லிசா ஜெரார்ட்
மதிப்பீடு – 4/5
சொந்த கதைகள் எப்போதும் பார்வையாளர்களை ஈர்த்து, அவர்களுக்கு ஊக்கமளிக்க வல்லவை!
உண்மை நிகழ்வின் சாரத்தை பாதிக்காமல், அதை சிறப்பான திரைப்படமாக உருவாக்கி பார்வையாளர்களின் மனதில் நீண்ட நேரம் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தினால், அது ஒரு மனதை உருக்கும் அனுபவமாக அமையும்!
உயர்ந்த இலக்குகளை அடைய விரும்பும் ஒருவன், கால் பந்து வீரன் ஆக வேண்டும் என்ற கனவுடன் நகரத்துக்கு வருகிறான் அவன் கனவு என்ன ஆயிற்று என்பது தான் கதை. கால்பந்து வீரனின் துன்பங்களையும், அவன் எதிர்நோக்கும் சவால்களையும் மோகித் ராம்சந்தானி எழுதி, இயக்கியுள்ள இந்த படம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.
அந்த சிறுவனின் கனவுகள் சிதைந்து போகின்றன, அவன் மெக்சிகோவிலிருந்து கடத்தப்பட்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு உடைகள் தயாரிக்கும் கடைக்கு விற்கப்படும்போது!
அந்த சிறுவன் மனநிலையில் என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்!
படம் சிறுவனின் துன்பமான நிலையை உணர்ச்சிப் பூர்வமாக வெளிப்படுத்துகிறது.
அவன் இந்த தடைகளை மீறி தனது கனவுகளை நோக்கி செல்ல முடிந்தானா என்பதே படத்தின் சுவாரஸ்யமான மிச்சக்கதை!
தன்னைச் சுற்றியுள்ள பிடியில் இருந்து தப்பித்து விடுதலை பெற, அவன் ஒரு துணிச்சலான திட்டத்தை தீட்டுவதை படத்தின் கதை எமோஷன்களுடன் கூறுகிறது!
அற்புதமான திரைக்கதை எதார்த்தமான நடிப்பு இதன் மூலம் நம்மை படம் மிகவும் கவருகிறது.
அமெரிக்க என்றால் வசதியும் ஆடம்பரமும் என்று எதிர்நோக்கும் நமக்கு புதிய அனுபம் தான் இந்த படம் அங்கும் கொடுமைகள் உள்ளது அங்கும் லஞ்சம் வாங்கும் போலீஸ் உள்ளார்கள். என்பதை மிக சிறப்பாக அதோடு தைரியமாக கூறியுள்ளார் இயக்குனர். அமெரிக்க அரசியலையும் ஒரு வரியில் சிறப்பாக கூறியிருக்கிறார்.