Wednesday, April 1
Shadow

காலேஜ் குமார் திரைவிமர்சனம் (கலகலப்பானவர்) Rank 3.5/5

சமீபகாலமாக நல்ல படங்கள் வெளியாகிறது ஆனால் ஒரு குறை நல்ல குடும்ப படங்கள் சமீப காலமாக வரவில்லை என்பது மிக பெரிய குறை அந்த குறையை தீர்க்க வருகிறது காலேஜ் குமார் இளைய திலகம் பிரபு நடிப்பில் இன்று வெளியாகி உள்ளது .

இது முழுக்க குடும்ப படம் இந்த படத்தில் பிரபு, மதுபாலா இருவரும் பாஞ்சால குறுஞ்சி படத்துக்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள் . இவ்ரகளுடன் அறிமுக நாயகனாக ராகுல் விஜய் அறிமுக நாயகியாக பிரியா வட்லாமணி நாசர் மனோபாலா சாம்ஸ் மற்றும் பலர் நடிப்பில் இசை புயல் எ.ஆர்.ரகுமான் உதவியாளர் குதூப் ஈ க்ருபா இசையில் குரு பிரசாத் சாய் ஒளிப்பதிவில் ஹரி சந்தோஷ் இயக்கத்தில்  வெளியாகும் படம் காலேஜ் குமார். இந்த படத்தை எம்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் எல்.பத்மநாபா தயாரித்துள்ளார். படத்தை UFO நிறுவனம் ரிலிஸ் செய்துள்ளனர்

அப்பா மனகுக்கும் உள்ள ஒரு உறவை பற்றி சொல்லும் வித்தியாசமான ஒரு குடும்ப படம்  முற்றிலும்   நகைசுவை கலந்த சென்டிமென்ட் படம் காட்சிக்கு காட்சி நம்மை மிகவும் கலகலப்பாக காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குனர் ஹரி சந்தோஷ்

பெற்றோர்கள் தங்களது ஆசைகளையும், கனவுகளையும் பிள்ளைகள் மீது திணித்து அவர்களின் திறமை குறித்து அறியாமல் போவதால், அவர்கள் எத்தகைய பாதிப்புகளை சந்திக்கிறார்கள் என்பதை காமெடியாகவும், செண்டிமெண்டாகவும் சொல்லியிருப்பது தான் ’காலேஜ் குமார்;.

சரியாக படிக்க முடியாமல், அலுவலகம் ஒன்றில் பியூனாக பணிபுரியும் பிரபு, தனது நண்பருடன் போட்ட சவாலுக்காக தனது மகனை, படிப்பில் முதலாவதாக வர வைக்க வேண்டும், என்று சிறு வயது முதல் அவருக்கு படிப்பை தவிர வேறு எதிலும் ஆர்வம் போகக்கூடாது, என்று அழுத்தம் கொடுத்து வருகிறார். அப்பாவின் ஆசைக்காக, படிப்பது போல நடிக்கும் ராகுல் விஜய், ஒரு கட்டத்தில் கல்லூரியில் இருந்தே நீக்கப்படுகிறார். இதனால், மகன் மீது பிரபு கோபப்பட, அவரது மகனோ, “நான் உங்களுக்கு பணம் கட்டுகிறேன், நீங்கள் படித்து முதலிடத்திற்கு வர முடியுமா?” என்று கேட்க, பிரபு அதை ஏற்று கல்லூரியில் படிக்க தொடங்குகிறார். இறுதியில் அவர் சவாலில் ஜெயித்தாரா இல்லையா, என்பது தான் கதை.

படத்தின் ஹீரோ ராகுல் விஜய், தமிழிக்கு அறிமுகம் என்றாலும், முதல் படம் என்பது தெரியாத வகையில் கச்சிதமாக நடித்திருக்கிறார். டான்ஸ், ஆக்‌ஷன், காமெடி என்று கமர்ஷியல் ஹீரோவுக்கு தேவையான அனைத்து தகுதிகளும் கொண்டவராகவும் இருக்கிறார்.

ஹீரோவுக்கு அப்பா என்றாலும், பிரபுவும் படத்தில் ஒரு ஹீரோ தான். நண்பனிடம் போட்ட சவாலுக்காக, மகனை படி…படி…என்று சொல்லும் பிரபு, அதே மகனிடம் போட்ட சவாலுக்காக, கல்லூரிக்கு சென்று படிப்பது காமெடியாக இருந்தாலும், ஒவ்வொரு பெற்றோர்களின் கனவையும் பிரதிபலிப்பது போலவும் இருக்கிறது. ஆரம்பத்தில் சாதாரண மிடில் கிளாஸ் அப்பாவாக வெகுளித்தனமான நடிப்பால் அசத்தும் பிரபு, கல்லூரி மாணவரான பிறகு, கெட்டப்பை மாற்றி செய்யும் யூத் சேட்டைகளும் ரசிக்க வைக்கிறது.

ஹீரோயினாக நடித்திருக்கும் பிரியா வட்லமணி குறைவான போர்ஷனில் வந்து போகிறார். இருந்தும் நிறைவாக நடித்துள்ளார் மிகவும் அழகாயிருக்கிறார் பிரபுவின் மனைவியாக நடித்திருக்கும் மதுபாலா, நடிப்பு மீது  மிகவும் ஆர்வமாக உள்ளார் கதைக்கு ஏற்ப தனது நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

நாசர், மனோபாலா, சாம்ஸ் என்று மற்ற நடிகர்களும் தங்களது வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் குதூப் ஈ க்ருபாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அருமையாக  படத்திற்கு பொருத்தமானதாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் குரு பிரசாத் ராய், கதைக்கு ஏற்ப பணியாற்றியிருக்கிறார்.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுக்காமல், அவர்களின் போக்கில் விட்டால், நிச்சயம் அவர்களும் சமூகத்தில் பெரிய மனிதர்களாக வருவார்கள், என்பதை பதிவு செய்திருக்கும் இயக்குநர் ஹரி சந்தோஷ், பிள்ளைகளின் படிப்புக்காக பெற்றோர்கள் எப்படி சிரமப்படுகிறார்கள், என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

முதல் மதிப்பெண் எடுப்பவர்கள் மட்டுமே, உயரத்திற்கு செல்ல முடியும், என்ற சில பெற்றோர்களின் தவறான கண்ணோட்டத்தை மாற்றும் விதத்தில், பல காட்சிகளை வைத்திருக்கும் இயக்குநர், தங்களிடம் இருக்கும் திறமையை அறிந்து உழைத்தால், உயரத்திற்கு செல்லலாம், என்ற நல்ல மெசஜையும் சொல்லியிருக்கிறார்.

ஃபேமிலி டிராமா ஜானர் படம் என்பதால் மிகவும் காமடியாக கல கலப்பாகவும் அதே நேரத்தில் மிக சிறந்த கருத்தையும் சொல்லி இருக்கிறார் . இயக்குனர் ,  இயக்குநர் ஹரி சந்தோஷ், சொல்லியிருக்கும் மெசஜுக்காக இந்த படத்தை பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் சென்று கண்டிப்பாக  பார்க்க வேண்டும்.

மொத்தத்தில் காலேஜ் குமார்- கலகலப்பானவர்