Sunday, May 19
Shadow

கனெக்ட் – திரைவிமர்சனம்(கனெக்ட் நம்மை கனெக்ட் செய்கிறது)Rank 4/5

கனெக்ட் தமிழ் படம் இந்தப்படம் ரசிகர்களோடு கனெக்கெட் பண்ணுதா என்று இன்றைய திரைவிமர்சனத்தில் பார்ப்போம்.

கொரானா ஊரடங்கு காலத்தில் நடக்கும் கதையாக இந்த கதையை இயக்குனர் அஸ்வின் சரவணன் அமைத்துள்ளார்.

அழகான அமைதியான வினய் மற்றும் நயன்தாரா குடும்பம் இவர்களுக்கு பதினைந்து வயதில் ஒரு பொண்ணு நயன்தாராவின் அப்பாவாக சத்யராஜ் மிகவும் சந்தோசமாக இருக்கும் இந்த குடும்பம். தன் மகளை லண்டனில் படிக்க வைக்க துடிக்கும் அப்பா வினய் அதற்கு தடை போடும் அம்மாவாக நயன்தாரா இதற்கிடையில் கொரானா தாண்டவம் ஆரம்பிக்குது இதில் டாக்ட்டராக வரும் வினை கொரனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் போது அவருக்கும் கொரானா தாக்கி உயிர் இழக்குகிறார். . இந்த சூழ்நிலையில் நயன்தாராவுக்கும் அவரின் மகளுக்கும் கொரனா பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

இதனால் மிகவும் மனம் உடையும் மகள் அப்பா இறப்பில் அவரின் உடலை பார்க்க முடியாமல் போகிறது இதனால் தன் அப்பாவின் ஆவியுடன் பேச ஆசைபட்டு ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு பேசும் போது அந்த சில தடங்களால் அந்த பேச்சு தடைபடுகிறது இந்த சூழ்நிலையில் ஒரு கெட்ட ஆவி இந்த பெண்ணின் உடலில் தங்குகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு இந்த பதிப்பில் இருந்து எப்படி இந்த பெண் விடுபடுகிறான் இதற்காக நயன்தாரா படும் பாடு தான் மீதி கதை .


சிறந்த கதையை தேர்ந்த்டுத்து நடிக்கும் நயன்தாரா மீண்டும் ஒரு மிக சிறந்த கதையை தேர்ந்த்டுத்து அதில் மிகவும் சிறப்பாக கதையின் நாயகியாக நடித்து இருக்கிறார்.ஒரு பெண்ணுக்கு அம்மாவாக நடிப்பது அவ்வளவு சாதாரணம் இல்லை காரணம் கவர்ச்சி குயின் லேடி சூப்பர் ஸ்டார் இப்படி அந்தஸ்த்தில் உள்ள ஒருவர் இப்படி ஒரு பாத்திரத்தில் தேர்ந்த்டுத்து மிகவும் சிறப்பாக நடித்து இருக்கிறார். நயன்தாராவுக்கு இந்த படம் ஒரு மைல்கல் என்று சொன்னால் மிகையாகாது.

படத்தின் மேலும் ஒரு பலம் சத்யராஜ் தாத்தாவாக நடித்து இருக்கும் சத்யராஜ் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடித்து இருக்கிறார்.அதேபோல நயன்தாராவின் கணவராக வரும் வினய் தன் கதாபாத்திரம் உணர்ந்து மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கும் அனுப்பெம் கெர் படத்தின் மிக பெரிய பலம் என்று தான் சொல்லணும். இந்த இடத்தில இயக்குனர் அஸ்வினை பாராட்டிடவேண்டும் கரணம் இந்த பாத்திரத்துக்கு அவரை தேர்நதெடுத்தது.

நயன்தாரா மகளாக நடிக்கும் ஹனியா நபிஸா மிக சிறப்பாக நடித்து இந்த படத்தின் வெற்றிக்கு வழி வகுத்து இருக்கிறார்.

படத்தின் ஒட்டு மொத்த பலம் இயக்குனர் அஸ்வின் சரவணன் தான் மிக சுலபமான கதைக்களத்தில் மிக சிறந்த திரைக்கதை மூலம் படத்தின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார். ஒரே வீட்டில் வைத்து ஒரு சிறப்பான காட்சியமைப்பில் கொரானா தனிமைப்படுத்தல் காலத்தில் ஒரு கதையை யோசித்து அதில் இப்படி ஒரு களம் அமைத்து இருப்பது அருமை. அதோடு ரசிகர்களை கவர விறுவிறுப்பான ஹாரரர் திரில்லறையும் இணைத்து மிகவும் சிறப்பாக காட்சிகளை விறுவிறுவென படு சுவாரசியமாக அமைத்துள்ளார் .
மொத்தத்தில் கனெக்ட் நம்மை கனெக்ட் செய்கிறது