Thursday, October 22
Shadow

டகால்டி திரை விமர்சனம் (ரேடிங் 3.5/5)

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு-2, ஏ1 ஆகிய படங்களை தொடர்ந்து வெளியாகியிருக்கும் திரைப்படம் டகால்டி.. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்.

பெண்களை தேடி சீரழிக்கும் பணக்கார வில்லனிடம் சிக்கிய பெண்ணை காப்பற்றும் ஹீரோ, அந்த பெண்ணிடம் காதலில் விழுவது தான் படத்தின் கதை.

மும்பையில் பல்வேறு மோசடி வேலைகளை செய்து பணம் சேர்த்து வருகிறார் குரு (சந்தானம்) அதே ஊரில் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் விஜய் சாம்ராட் (தருண் அரோரா) தனக்கு பிடித்த பெண் உருவத்தை வரைந்து, அந்த பெண்ணை இந்தியாவில் எங்கு இருந்தாலும் கொண்டு வந்து தன் ஆசையை தீற்றுக்கொள்பவர்.

இவர் ஒரு பெண்ணை வரைந்து அந்த பெண்ணை இந்தியா முழுவதும் உள்ள ரவுடிகளிடம் கொடுக்கின்றார். அந்த சமயத்தில் மும்பையில் டான்-ஆக இருக்கும் பாய் (ராதாரவி)யிடம் சந்தானம் தொழில் ரீதியாக மாட்டிக்கொள்ள, அவரை கொல்ல ராதாரவி உத்தரவிடுகின்றார். சந்தானம் உடனே அந்த வீட்டில் இருக்கும் அந்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்துவிட்டு, இந்த பெண்ணை எனக்கு தெரியும், ஒரு வாரத்தில் ஒப்படைக்கிறேஎன் என்று கூறி அங்கிருந்து எஸ்கேப் ஆகி, அந்த பெண்ணை எப்படியோ கண்டுப்பிடிக்கின்றார், பிறகு அந்த பெண்ணை சொன்னது போல் ஒப்படைத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

சந்தானம் கவுண்டர் அடிப்பதில் கிங் தான், அந்த விதத்தில் இந்த படத்திலும் தூள் கிளப்புகின்றார், அதிலும் கூடுதல் போனஸாக யோகிபாபுவும் களத்தில் இறங்க படம் அரை மணி நேரம் செம்ம கலகலப்பாக செல்கின்றது.ஹீரோயின் சினிமாவில் இயக்குனராக ஆக வேண்டும் என்ற ஆசையை சந்தானம் பயன்படுத்தி அவரை மும்பை கொண்டு வரும் காட்சிகள் ஓரளவிற்கு பரவாயில்லை ரகம், அதுவும் கதை கேட்கும் காட்சி எல்லாம் உண்மையாகவே சிரிக்க வைக்கின்றது.

ஒரு வழியாக கிளைமேக்ஸ் வந்ததும் வழக்கமான காமெடி படங்களில் ஆள் மாறாட்ட கதை கொஞ்சம் சிரிப்பை வரவைக்கின்றது, மேலும், யோகிபாபு வரும் இடமெல்லாம் சிரிப்பிற்கு புல் கேரண்டி, கிளைமேக்ஸில் ஹீரோயினை திட்டும் காட்சியில் எல்லாம் நமக்கே சந்தோஷம் வர காரணம், ஹீரோயின் ரித்திகா சென் கதாபாத்திரம் தான்.

படத்தின் பிளஸ்: சந்தனத்தின் நடிப்பு, யோகிபாபு காமடி

படத்தின் மைன்ஸ்: படத்தின் திரைக்கதை

மொத்தத்தில் ஒரு முறை பார்க்கலாம் என்ற ராகமே.