Tuesday, December 3
Shadow

டிமாண்டி காலனி 2 – திரைவிமர்சனம் (A Real Horror) Rank 4/5


இயக்குனர் அஜய் ஞானமுத்து ஏற்கனவே இரண்டு திரில்லர் படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய இடத்தை பிடித்து வையத்து இருப்பவர்.தற்போது நேற்று வெளியாகி இருக்கும் டிமான்ட்டி காலனி 2 படத்தில் அந்த நல்ல பேரை தக்கவைத்து கொள்பார என்று பார்ப்போம்

இந்த படத்தில் அருள்நிதி பிரியா பவானிசங்கர் ஆண்டி ஜாஸ்கெலைனன் டிசெரிங் டோர்ஜி அருண் பாண்டியன் முத்துக்குமார்,அதிதி – மீனாட்சி கோவிந்தராஜன்,சர்ஜனோ காலிட் , அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடிப்பில் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் சாம்.சி.எஸ். இசையில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் டிமான்ட்டி காலனி 2

2015ஆம் ஆண்டில் யில் வெளியான டிமான்ட்டி காலனி முதல் பாகத்தில் அருள்நிதி இறப்பது போல் முடிந்திருக்கும். ஆனால், இந்த பாகம் அதனுடனேயே தொடர்ச்சி ஆக பிரியா பவானி ஷங்கரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும் காண்பிக்கப்படுகிறது.இந்த பாகத்தில் அருள்நிதி இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.அதில் சீனிவாசன் (அருள்நிதி) மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, அவருடைய அண்ணன் ரகுநந்தன் (இன்னொரு அருள்நிதி), தந்தையின் சொத்துக்களை அடைய தம்பி சாகவேண்டும் என்று முற்படுகிறார்.

அப்போது ஒரு காரணத்திற்காக சீனிவாசன் உயிரோடு இருக்க வேண்டும் என்று கூறி ரகுநந்தனை தடுக்கும் டெபி (பிரியா பவானி சங்கர் ), அவருடன் இணைந்து டிமான்ட்டி காலனிக்கு அழைத்து செல்கிறார். அதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான அமானுஷ்ய சம்பவங்களே டிமாண்டி காலனி 2-யின் விறுவிறுப்பான திரைக்கதை.

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த தன் கணவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற கேள்விக்கு டெபி விடைதேடி அலைகிறார்.

அதில் ஆரம்பிக்கும் மர்மம் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தொடர்வதில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் அருமையான ஒரு கதை கொடுத்து இருக்கும் இயக்குனரை பாராட்டியே வேண்டும் பல படங்கள் இரண்டாம் பாகம் மூண்டாரம் பாகம் வரும் ஆனால் கடஹிக்கு சம்மந்தம் இல்லாமல் இருக்கும் அப்படி இல்லாமல் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கான தொடர்பு அருமை படத்தின் பலம் என்றால் அது திரைக்கதை தான் அற்புதமான விறுவிறுப்பான திரைக்கதை ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன என்று ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளார்.இயக்குனர் இயக்குனர் அஜய் ஞான முத்து நிச்சயம் ஒரு நாள் ஹாலிவுட் படங்களை இயக்கம் துகுத்தியுள்ள ஒரு இயக்குனர்

ரகு கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் சுயநலவாதியாக வரும் அருள்நிதி, சில இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கவும் தவறவில்லை.தனக்கு கொடுத்து இருக்கும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார் அருள்நிதி.இயக்குனரின் நடிகராக வளம் வந்து இருக்கிறார்.

ப்ரியா பாவனை ஷங்கர் அற்புதமான கதாபாத்திரம் அதை மிகவும் உணர்ந்து நடித்து இருக்கிறார். அதேபோல அருண்பாண்டியன் புத்தமத சாமியாராக வரும் டிசெரிங் டோர்ஜி படத்துக்கு மிக பெரிய பலம்

சாம் C.Sயின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். காட்சிக்கு காட்சி திகிலூட்ட அது உதவுகிறது. பாடல்கள் ஓகே ரகம்.

காட்சிக்கு காட்சி நம்மை மிரட்ட மட்டும் செய்யாமல் ஒரு நல்ல கதையிலும் திரைக்கதையிலும் இயக்குநர் கவனம் செலுத்தி இருக்கிறார். படத்தில் பல ட்விஸ்ட்கள் ஒளிந்திருப்பது நம்மை சீட் எட்ஜில் அமர வைக்கிறது. ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு பிரமாதம்.

மொத்தத்தில் டிமாண்டி காலனி 2 விறுவிறுப்பு