Thursday, May 30
Shadow

புதிய ஹோட்டலை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்த நடிகை தான்யா ஹோப்*

தமிழில் தடம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான்யா ஹோப். இப்படத்தை தொடர்ந்து தாராள பிரபு படத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்தார். இவர் தற்போது சென்னையில் அறிமுகமாகி இருக்கும் அண்ணாநகர் ஹாட் பாட் (Takeaway) என்னும் ஓட்டலை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து இருக்கிறார்.

யூனிட் ஆப் கே ஸ்கொயரின்(A unit of k square ventures) புதிய முயற்சியாக அண்ணாநகர் ஹாட் பாட் என்னும் ஓட்டலை உருவாக்கி இருக்கிறார்கள். இதில் சிறப்பு விருந்தினர்களாக திரு.ஏ.வி.அனூப் (MD of Medimix), திரு.விஷ்ணு (Director of A2B), செல்வி நடிகை தான்யா ஹோப் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.