Friday, November 14
Shadow

டி என் ஏ திரைவிமர்சனம் (அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்) Rank 4.5/5

டி என் ஏ திரைவிமர்சனம்

நடிகர் அதர்வா, நிமிஷா சஜெயன், பாலாஜி சக்திவேல், சேத்தன்,ரமேஷ் திலக், ரித்விகா, சுப்பிரமணி சிவா,கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் ஜிப்ரான் இசையில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் திரில்லர் படம் தான் DNA

 

இந்த படம் பிறந்த குழந்தை கடத்தலை பற்றிய ஒரு படம் .

காதல் தோல்வியால் முழு நேர குடிகாரனாக மாறிய அதர்வா இதனால் அவர் வீட்டில் அவரை மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள். இந்த சூழ்நிலையில் அதர்வா தம்பிக்கு திருமணம் நடக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அகர்வாலுக்கு சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை அதாவது நிமிஷாவை திருமணம் செய்து வைக்கிறார்கள். அந்த திருமணத்தை தடுக்க ரமேஷ் சில போராடுகிறார். இருந்தும் அதர்வா அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஒரு குழந்தையும் உண்டாகிறது. குழந்தை பிறந்ததும் குழந்தையை இங்கு பெற்று வைக்க கொண்டு போகும் செல்வார்கள் அந்த நேரத்தில் குழந்தை மாறிவிடும். இதை சரியாக கண்டுபிடித்து விடுவார் நிமிஷா குழந்தையை மாற்றி விட்டார்கள் என்று அதர்வாவிடம் நிமிஷா சொல்ல குடும்பத்தில் இருக்கிற அனைவரும் அவள் ஒரு பைத்தியம் அவள் சொல்வதை நம்பாதீர்கள் என்று சொல்ல ஆனால் நிமிஷ ஒரே பிடிவாதமாக குழந்தையை மாற்றி விட்டார்கள் என்று அடம் பிடிப்பதால் அதர்வா அந்த மருத்துவமனையில் விசாரிக்கிறார். ஆனால் அந்த மருத்துவமனை இல்லை குழந்தை மாற எந்தவிதமான வாய்ப்பு இல்லை என்று சொல்ல இவரும் ஒரு கட்டத்தில் தன்னை சமாதானப்படுத்திக் கொள்கிறார் ஆனால் அவர் மனதில் தன் மனைவியின் நிலையை கண்டு ஒரு வேதனையை தருகிறது இதனால் குழந்தையை டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கிறார் டிஎன்ஏ டெஸ்டில் இது வேறு குழந்தை என்று தெரிய வர தன் குழந்தையை தேடி அலைகிறார் தன் குழந்தையை கண்டுபிடித்தார் இல்லையா என்பதுதான் கதை கதை.

 

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் வெற்றி படங்களும் அது மட்டுமில்லாமல் நிச்சயமாக தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான கதை களத்துடன் தான் வந்திருக்கிறார் அப்படித்தான் இந்த படமும் மிகவும் ஒரு வித்தியாசமான ஒரு கதைக்களம் குழந்தை கடத்தல் என்பது நாம் ஏற்கனவே பல படங்கள் பார்த்திருந்தாலும் இந்த படத்தில் முற்றிலும் வித்தியாசமான ஒரு திரைக்கதையை கொடுத்து நம்மை பிரமிக்க வைக்கிறார். குழந்தையை கடத்தி என்னென்ன எல்லாம் நடக்கிறது என்பதை அம்பலப்படுத்தி நமக்கெல்லாம் ஒரு ஐயத்தை உண்டு பண்ண வைத்திருக்கிறார். இன்றும் நரபலி இருக்கிறது என்ற விஷயங்கள் எல்லாம் இந்த படத்தில் காண்பித்திருக்கிறார் அது மட்டுமல்ல சென்னையிலேயே இந்த நரபலி எல்லாம் நடக்கிறது என்பதையும் அம்பலப்படுத்தி இருக்கிறார். இப்படி ஒரு திரில்லர் கதையை எழுதிவிட்டு கதைக்கு ஏற்ப கட்சிதமான நடிகர் நடிகைகளை தேர்வு செய்து மிகவும் அற்புதமாக இந்த படத்தை நமக்கு பரிசாக கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் முதல் பாதியில் நம்மை சென்டிமென்டில் நனைய வைக்கிறார் இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க ஒரு திரில்லர் படமாக திரைக்கதை அமைத்துள்ளார் தன் குழந்தையை தேடி அதர்வா செல்லும் காட்சிகள் மிகவும் அற்புதமாக படமாக்கி உள்ளார்.

 

அதர்வா அவர் எத்தனையோ படங்கள் பண்ணி இருந்தாலும் அவருக்கென்று ஒரு முத்திரை பதித்த படங்கள் என்று ஒன்றுமில்லை ஆனால் அதை தகர்த்தெறியும் விதத்தில் இந்த படத்தை இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் அதர்வாக்கு கொடுத்திருக்கிறார். அதை அதர்வா மிக அருமையாக புரிந்து உணர்ந்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் இதனால் மிகப்பெரிய ஒரு வெற்றி படத்தை தமிழ் ரசிகர்கள் கொடுத்திருக்கிறார் என்று கூட சொல்லலாம்.

 

நிமிஷா சஜ்யன் மலையாள நடிகை என்றாலும் தமிழ் கதாபாத்திரத்தை உணர்ந்து அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இந்த படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொன்னால் நிமிஷா முழுசா என்றே சொல்லலாம் தன் குழந்தையின் பிரிவை காட்சிககு காட்சி நம நெஞ்சை நெகிழ வைக்கும் அளவிற்கு ஒரு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

 

படத்தில் நடித்த மட்ட அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் அற்புதமாக நடித்துள்ளனர் குறிப்பாக ரமேஷ் சில சேர்த்தன் இவர்களுடைய நடிப்பு படத்திற்கு பலம் என்றே சொல்லலாம் இதை எல்லாம் மீறி இயக்குனர் பாலாஜி சக்திவேல் இந்த படத்தை இவரும் மிகப்பெரிய அளவில் தாங்கி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். குழந்தை காணவில்லை என்ற கம்ப்ளைன்ட் வந்ததும் சார் எனக்கு இன்னும் 18 நாட்களில் ரிட்டயர்மென்ட் நான் இந்த கேசில் துப்பு துலகக வேண்டுமா என்று கேட்க ஆமாம் நீங்கள் தான் என்று செய்ய வேண்டும் என்று சொல்ல அந்தக் குழந்தையை கிடைக்க அவர் படும் பாடு மிகவும் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

 

படத்தின் அடுத்த மிகப்பெரிய பலம் என்று சொன்னால் இசையமைப்பாளர் ஜிப்ரன். அற்புதமான பின்னணி இசையும் பாடல்களையும் கொடுத்து கதைக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஒரு அற்புதமான ஒரு திரில்லர் கதையின் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கடைசி 15 நிமிடம் திரையரங்கை அலர வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் ரசிகர்கள் அந்த அளவுக்கு 15 நிமிடம் ஆரவாரம் செய்து அவரை பாராட்டுகிறார்கள். நகைச்சுவை படங்களுக்கு கைதட்டி பார்த்திருப்போம் ஆனால் ஒரு திரில்லர் படத்திற்கு அந்த கதையுடன் தன்னை இணைத்துக் கொண்டு அற்புதமான உணர்வை ரசிகர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்

 

மொத்தத்தில் டி என் ஏ அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம்