Monday, May 20
Shadow

டூடி – திரைவிமர்சனம் ( வசீகரம்) Rank 3.5/5

Connecting Dots Productions என்ற புதிய பட நிறுவனம் தயாரிப்பில் உருவாக்கியுள்ள படம்
” டூடி” இந்த படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்து இருக்கும் படம் ஆனால் இவர்கள் புதுமுகங்களா என்று சொல்லும் அளவுக்கு படத்தில் ஒவ்வொருத்தர் பங்கும் அவ்வளவு அருமையாக கொடுத்துள்ளனர் மிகவும் பிரஷ் கண்டன்ட் என்று சொல்லலாம்.

மிகவும் எதார்த்தமான காதல் கதை அதாவது இன்றைய 2k கிட்ஸ் காதல் கதை என்று சொன்னால் மிகையாகாது படத்தின் இயக்குனர்கள் கார்த்திக் மதுசூதன், சாம் RD.X இவர்களின் திரைக்கதையமைப்பும் சரி காட்சி அமைப்பும் சரி மிக அற்புதமாக உள்ளது படம் முழுக்க முழுக்க பெங்களூரில் நடக்கும் கதையாக அமைத்துள்ளனர். பெங்களூரு என்ற கலாசாரத்தை மிகவும் அழகாக காண்பித்துள்ளார்.

படத்தின் ட்ரைலர் மற்றும் விளம்பரங்களில் இந்த படத்தின் ப்ரோமோஷன் எல்லாமே இது ஒரு மாதிரி செக்ஸ் படம் போல இருக்கும் ஆனால் இது ஒரு மிக சிறந்த காதல் கதை.

சரி படத்தில் நடித்தவர்களை பற்றி பார்ப்போம் அனைவரும் புதுமுகங்கள் கார்த்திக் மதுசூதன் ( கார்த்திக் ), ஷ்ரிதா சிவதாஸ் ( இந்து ), ஜீவா ரவி( இந்து அப்பா) , ஸ்ரீ ரஞ்சனி (இந்து அம்மா) , சனா ஷாலினி, ஜீவி மதுசூதன் ( Uncle ), உத்ரா ( Aunty ) குறைந்த கதாபாத்திரங்கள் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர் ஒருஒருவருக்கு போட்டி போட்டு நடித்துள்ளனர்.

கார்த்திக் வயசு 33 காதல் கல்யாணம் இவற்றில் நம்பிக்கை இல்லாதவர் குடி கும்மாளம் என்று வாழ்க்கையை வாழ்பவர் சம்பாதிக்க பப்யில் இசை கலைஞராக பணிபுரிபவர் தினம் ஒரு பெண் என்று தன வாழ்க்கையை ரசித்து வாழ்பவர் . இதற்கு காரணம் இவர் வாழ்க்கையில் நடந்த ஒரு காதல் தோல்விதான் காரணம்.

ஒரு கல்யாணத்துக்கு செல்லும் கார்த்திக் ஒரு பெண்ணை பார்க்க இவள் தான் இன்று நம் விருந்து என்று அந்த பெண்ணை நெருங்குகிறார் ஆனால் அந்த பெண் முற்றிலும் வித்தியாசமான பெண் சென்னையை சேர்ந்த பெண் இந்து இவருக்கு கார்த்திக் தன்னை கவர முயற்சிக்கிறார் என்று தெரிய வருகிறது இருந்தும் அவருக்கு பிடிகொடுக்காமல் நழுவுகிறார். இருந்தும் கார்த்திக் அணுகுமுறை அவரை கவருகிறது. கார்த்திக் மேல் ஒரு வித காதல் வந்து கார்த்திக்கை நெருங்குகிறார்.

ஆனால் இந்து வேறு ஒருவருடன் நிச்சியம் செய்து இருப்பார்கள் அதுவும் கிட்டத்தட்ட்ட ஐந்து வருட காதல் திருமண நிச்சயம் இருந்தும் கார்த்திக்கை இந்து நெருங்குகிறாள். காதல் கல்யாணத்துமேல் விருப்பம் இல்லாமல் இருந்த கார்த்திக்கு இந்து மேல் காதல் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் இவள் உண்மையை சொல்லுகிறாள் எனக்கு ஏற்கனவு திருமணம் நிச்ச்யம் நடந்து விட்டது என்று சொல்ல அவன் நொந்து போகிறான் மனம் உடைந்து மீண்டும் அதிகமாக குடிக்க ஆரம்பிக்கிறான் மிருகம் போல நடக்க ஆரம்பிக்கிறான். இந்த காதல் கலயாணத்தில் முடிந்ததா இல்லை இந்த முக்கோண காதல் என்ன ஆனது என்பது தான் மீதி கதை

படத்துக்கு மிக பெரிய பிளஸ் என்று சொன்னால் ஒளிப்பதிவும் இசையும் அறிமுக இசையமைப்பாளர் இசை – K.C. பாலசாரங்கன் மற்றும் ஒளிப்பதிவுவாளர்கள் – மதன் சுந்தர்ராஜ், சுனில் G N படத்தை வேறு ஒரு பரிமாணத்துக்கு கொடுத்துள்ளனர் சிறப்பான இசை கண்ணுக்கு குளுர்ச்சியான ஒளிப்பதிவு

படத்திற்கு மிக பெரிய பிளஸ் ஹீரோ கார்த்திக் மதுசூதன் மிக சிறந்த நடிப்பில் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்,இதோடு இந்த படத்தின் ஒரு இயக்குனாராகவும் பணிபுரிந்துள்ளார்.

நாயகி ஷ்ரிதா சிவதாஸ் இந்துவாக நடித்து இருக்கும் தமிழ் சினிமாவுக்கு கிடைத்து இருக்கும் மிக சிறந்த அழகு நடிகை என்றுதான் சொல்லணும் அழகு மட்டும் இல்லை நடிப்பிலும் நம்மை கவருகிறார்.

மொத்தத்தில் டூடி வசீகரம்