Sunday, May 19
Shadow

“ட்ராமா” – திரைவிமர்சனம் (Rank 3.5/5)

ட்ராமா பட விமர்சனம்

அறிமுக இயக்குனர் அஜு குளுமலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “டிராமா”. கிஷோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜெய்பாலா நாயகனாகவும் காவ்யா பெல்லு நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.

இந்த படமானது ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. காவல் நிலையத்தில் புதிதாக பதவி ஏற்றுள்ளார் ஜெய் பாலா. அங்கு ஏட்டாக இருக்கும் சார்லி திடீரென கொலை செய்யப்படுகிறார். இந்த கொலையை விசாரிக்கும் அதிகாரியாக கிஷோர் நடித்துள்ளார். இறுதியில் யார் கொலை செய்தவர் எதற்காக செய்தார்‌ என்பதே ட்ராமா படத்தின்‌ கதை. ஒரே ஷாட்டில் படம் எடுக்கப்பட்டுள்ளதால் யார் பற்றியும் குறை சொல்ல முடியவில்லை. முயற்சிக்கு பாராட்டுகள். ஆனால் திரைக்கதை நம்மை‌ ரொம்பவும் சோதிக்கிறது.

ஒளிப்பதிவில் சற்று குறைகள் ஆங்காங்கே தென்பட்டாலும், நடிகர்களின் நடிப்பை பெரிதாக பாராட்டலாம். இந்த கதைக்கு சிங்கிள் ஷாட் காட்சிகள் மிகவும் அற்புதமான முயற்சி என்று சொல்ல வேண்டும். திரைக்கதையில் இன்னும் புதுமை சேர்ந்திருந்தால் ட்ராமா இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

புதிய முயற்சி நல்ல பலனை தரும்  திரை அரங்கததில் நிச்சயம் ஒரு நல்ல முயற்சியை ரசிக்கலாம்.