Tuesday, October 8
Shadow

எக்கோ’ – திரைப்பட விமர்சனம் (Rank 3/5)

ஸ்ரீகாந்த், பூஜா ஜாவேரி, ஆஷிப் வித்யார்த்தி லஷ்மி பிரதீப் காளி வெங்கட் மற்றும் பலர் நடிப்பில் நவீன் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் எக்கோ

ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஸ்ரீகாந்த், தனது மனைவி பூஜா ஜாவேரியுடன் வாழ்ந்து வருகிறார். திடீரென்று சில அமானுஷ்ய சம்பவங்களால் நிம்மதி இல்லாமல் தவிக்கும் ஸ்ரீகாந்தின், மாற்றத்தைக் கண்டு கோபமடையும் பூஜா ஜாவேரி அவரை விட்டு பிரிந்து செல்கிறார். தனக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்காக, அறிவியல் பூர்வமாக அமானுஷ்ய சக்திகளை கட்டுப்படுத்தும் நிபுணரான ஆசிஷ் வித்தியார்த்தியிடம் ஸ்ரீகாந்த் உதவி கேட்கிறார். அப்போது அவருக்கு நடந்தது பற்றி ஆசிஷ் வித்தியார்த்தி விசாரிக்கும் போது, தனக்கு நடப்பவை அனைத்தும் தனது முதல் மனைவிக்கு நடந்திருக்கிறது, என்று ஸ்ரீகாந்த் சொல்கிறார். அவரது முதல் மனைவி யார்? அவருக்கும், தற்போது ஸ்ரீகாந்த் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கும் என்ன தொடர்பு? என்பதை சொல்வது தான் ‘எக்கோ’ படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், ஏற்கனவே பல திகில் படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் மாறுபட்ட கதபாத்திரத்தில் கதாபாத்திரத்திற்கு நியயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

நாயகிகளாக நடித்திருக்கும் வித்யா பிரதீப் மற்றும் பூஜா ஜாவேரி இருவரும் கதைக்குள் பயணிக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

ஆசிஷ் வித்தியார்த்தி தனது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கும், படத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார்.

திகில் கதையை அறிவியலோடு தொடர்பு படுத்தி சொல்லியிருக்கும் இயக்குநர் நவீன் கணேஷ், பேய் என்பது நம் பயம் தான் என்பதையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

எந்தவித உருட்டல், மிரட்டல் இல்லாமல் திகில் காட்சிகளை படமாக்கியிருக்கும் இயக்குநர் பயந்தால் இல்லாத பேய் கூட இருப்பது போல தெரியும் என்ற கருத்தை சுவாரஸ்யமாக சொல்லி படத்தை ரசிக்க வைக்கிறார்.

மொத்தத்தில், வழக்கமான பாணியில் அல்லாமல் புதிய வழியில், எதார்த்தமாகவும் உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்லப்பட்டிருக்கும் இந்த ‘எக்கோ’ ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தை கொடுக்கும்.