Friday, January 17
Shadow

எமக்கு தொழில் ரொமான்ஸ் – திரைவிமர்சனம் Rank 2.5/5

பாலாஜி கேசவன் இயக்கத்தில் வெளிவந்துஇருக்கும் படம் எமக்கு தொழில் ரொமான்ஸ் இதில் நடிகர்கள்: அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா, ஊர்வசி, அழகம் பெருமாள், எம் எஸ் பாஸ்கர், பகவதி பெருமாள், படவா கோபி மற்றும்பலர் நடிப்பில் நிவாஸ் கே பிரசன்னா இசையில் கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் திருமலை .எம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் எமக்கு தொழில் ரொமான்ஸ்

கதைகுல் போகலாம் …

உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் அசோக் செல்வன். தன்னுடைய இயக்குனர் படம் ஒன்றை இயக்க, அப்படம் திரையரங்கில் வெளியாகிறது. முதல் நாள் காட்சிக்கு தனது இயக்குனரோடு சேர்ந்து படம் பார்க்க செல்கிறார் அசோக் செல்வன்.

ஆரம்பத்தில் நன்றாக செல்லும் கதையானது, போக போக படம் பார்ப்பவர்கள் அனைவரும் கோபத்தில் கொந்தளிக்க அங்கிருந்து தப்பித்து பிழைத்தால் போதும் என்று ஓடுகிறார் அசோக் செல்வன்.

அப்படி ஓடி வரும் போது நாயகி அவந்திகாவை சந்திக்கிறார். கண்டதும் அவர் மீது காதல் கொள்கிறார்.

ஒரு தலை காதலானது நாட்கள் செல்ல செல்ல இரு தலை காதலாக மாறுகிறது. காதலும் இனிதாக சென்று கொண்டிருக்க இருவருக்குள்ளும் புரிதல் இல்லாமல் போக, காதல் உடைகிறது. பின் மீண்டும் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் அசோக் செல்வன், துறுதுறுவென நடிப்பில் சுறுசுறுப்பாக இருந்தாலும், ஆங்காங்கே எட்டிப் பார்த்த ஒரு சில ஓவர் ஆக்டிங்கை சற்று கவனித்திருந்திருக்கலாம்.

நாயகி அவந்திகா மிஷ்ரா, பார்ப்பதற்கு அழகு தேவதையாக காட்சிகளில் தென்படுகிறார். நடிப்பில் இன்னும் பயிற்சி வேண்டும் அவந்திகா என்று சொல்ல வைத்துவிடுகிறார்.

ஊர்வசி தனது காமெடி கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். கடைசி 20 நிமிடங்கள் படம் கலகலப்பாக செல்வதால் படம் ரசிக்க வைத்து விடுகிறது.

பின்னணி இசை படத்திற்கு சரிவாக இருக்கிறது. எது காமெடி, எது காதல் என்று புரிவதற்கு இசை மிகப்பெரும் பங்கு வகிக்கும். ஆனால், இதில் அது சரியாக பயன்படுத்தவில்லை..

ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக இருக்கிறது.

பல சினிமாக்களில் பார்த்த ஒரு கதையை தான், இந்த படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் சற்று காமெடியை ரசிக்கும்படியாக கூறியிருந்திருக்கலாம். திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.

மொத்தத்தில்,

எமக்கு தொழில் ரொமான்ஸ் – ரொமான்ஸ் கொஞ்சம் வெனும்