Sunday, May 19
Shadow

எண் 6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு திரைவிமர்சனம் (ரேங்க் 2.25/5)

எண் 6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு விமர்சனம் 2.25/5

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ஒரு விளையாட்டு கதை அதோடு ஆக்ஷன் கலந்த கதை இந்த எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு  விளையாட்டு விறுவிறுப்பாக இருக்க இல்லை நம்மை சோ என்று பார்ப்போம்.

நடிகர்கள் : ஷரத், ஐய்ரா, மதன் தக்‌ஷினாமூர்த்தி, கஞ்சா கருப்பு, இளையா, நரேன்

இயக்கம்: ஹரி உத்ரா

இசை: அலி மிர்சாக்

ஒளிப்பதிவு: வினோத் ராஜா

மிகப்பெரும் ரெளடியான நரேனின் தம்பியாக வருகிறார் இளையா. ஒருநாள் இரவு வாத்தியார் கால்பந்தாட்ட குழுவைச் சேர்ந்த வீரரான நாயகன் ஷரத், இளையாவின் தலையை வெட்டி கொன்று விடுகிறார்.

இதனால் ஒட்டுமொத்த கால்பந்தாட்ட குழுவும் அதிர்ச்சியாகிறது. தனது தம்பி இளையாவை கொன்றவனை கொல்ல தனது ஆட்களை அனுப்பி வைக்கிறார் நரேன்.

ஊர் முழுவதும் இந்த டீம் அவர்களை தேடிக் கொண்டே இருக்கிறது. முதல் பாதி முழுவதும் தேடிக் கொண்டே இருக்க ஒருவழியாக கண்டுபிடித்து அவர்களை தாக்க முற்படும்போது, ரெளடிகளை கால்பந்தாட்ட குழுவினர் அடி துவைத்து விடுகின்றனர்.

அதன்பிறகு, மூத்த ரெளடியான நரேனை தேடிச் செல்கிறது அந்தகுழு. அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகனாக ஷரத், தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் அதிகமான வசனங்களை பேசுவது படத்திற்கு பெரும் சரிவு. நாயகனாக உருவெடுத்த பிறகு இப்படியான வசனங்களை பேசினால் எவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், ஷரத் இன்னும் அதீதீவிர நடிப்புப் பயிற்சி பெற்று அடுத்த படத்தில் நடிக்கலாம்.

மற்ற வீரர்களும் அதே மாதிரியான ஓவர் ஆக்டிங்கை கொடுத்து காட்சிகளை கெடுத்து வைத்திருக்கிறார்கள். இளையாவின் இண்ட்ரே சண்டைக் காட்சி மிகவும் யதார்த்தமாக இருந்தது.

பிரபல சண்டைஇயக்குனரான நரேன், தனது முரட்டுத்தனமான உடம்பை வைத்துக் கொண்டு ஆரவாரமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

ரெளடியாக வரும் ஆதேஷ் பாலா, தனது அனுபவ நடிப்பைக் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்படுவதை மிகவும் அற்புதமாக செய்து கொடுப்பவர் நடிகர் அருவி மதன். அவரையும் திக்கி திக்கி பேசும் கதாபாத்திரம் கொடுத்து ஓவர் ஆக்டிங்கை வாங்கியிருக்கிறார் இயக்குனர்.

நானும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மேல வர விட மாட்டீங்களாடா என வசனங்கள் கொண்ட படத்தை எடுக்கிறேன் என்று தன் பங்கிற்கு ஒரு படத்தை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா.

வலுவான திரைக்கதைஇல்லாமல், ஆங்காங்கே இல்லை பல இடங்களில் தடுமாறிச் செல்கிறது. வில்லனுக்கான வெயிட்டேஜ் அழுத்தம் இல்லாமல் இருப்பது படத்திற்கு மிகப்பெரும் இழப்பு.

காதல் இல்லாத ஒரு காதல் கதையும் படத்திற்குள் இருக்கிறது. இசை ஓகே ரகமாகவும், ஒளிப்பதிவு சற்று ஆறுதலாகவும் இருக்கிறது.

மொத்தத்தில்,

எண் 6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு – எனர்ஜி இல்லை..