Sunday, May 19
Shadow

ஹர்கார – திரைவிமர்சனம் (Rank 3.5/5)

ஹர்காரா சிறிய இடைவெளிக்கு பிறகு ஒரு பிரீயட் மற்றும் இன்றைய நிகழ் காலத்தை கலந்து சொல்லியிருக்கும் படம் முக்கிய கதாபாத்திரத்தில் காலி வெங்கட் ஒரு தபால்காரராக நடித்திருக்கிறார்.

ஒரு தபால்காரரின் வாழ்க்கை குறிப்பாக மலை பிரதேசங்களில் இருக்கும் ஒரு தபால்காரன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கண்முன் நிறுத்தி இருக்கும் படம் தான் இந்த ஹர்காரா

தரமான படங்களை தயாரிப்பது மட்டுமில்லாமல் தரமான படங்களில் வெளியிடுவதிலும் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த ஒரு நிறுவனம் என்று சொன்னால் அது ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் அந்த நிறுவனம்தான் இந்த படத்தை உலகம் முழுவதும் வெளியிட்டு இருக்கிறார்கள் அப்போதே தெரிந்து விட்டது இந்த படத்தின் தரம் எப்படி இருக்கும் என்று.

இந்த படத்தை ராம் அருண் காஸ்ட்ரோ இவர்தான் இயக்கியிருக்கிறார் இது ஒரு உண்மை கதை என்று கூட சொல்லலாம் இயக்குவதோடு இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரம் கிட்டத்தட்ட நாயகன் பாத்ரூம் என்று கூட சொல்லலாம் அந்த பாத்திரத்தில் மிக அற்புதமாக நடித்திருக்கிறார் குறிப்பாக அவருடைய சிலம்பாட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

150 ஆண்டுகளுக்கு முன் சுதந்திரம் வாங்குவதற்கு முன் ஒரு மலை கிராமத்துயில் நடந்த ஒரு கொடூரத்தை தான் இந்த படம் சொல்லி இருக்கிறது. அதோடு இன்று மழை பிரதேசத்தில் தபால்காரர்கள் படும் அவஸ்தைகளை சிரமங்களை காமெடியோடு மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

150 ஆண்டுகளுக்கு முன் மலை கிராமத்தில் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தில் இருக்கும்போது அந்த ஆங்கிலேயர்களுக்கு சேவகன் ஆக இருக்கும் மாதேஸ்வரன் ஆங்கிலேயர்களின் நம்பிக்கை கூறியவராகவும் இருக்கிறார். ஆங்கிலேயர்கள் தான் சிறந்தவர்கள் அவர்களால் அவர்களால் தான் நம் நாட்டில் பல முன்னேற்றங்கள் வந்திருக்கிறது என்று தப்பு கணக்கு போட்டு வாழும் வாலிபர் தான் மாதேஸ்வரன் ஒரு காலகட்டத்தில் ஆங்கிலேயர்களின் சுயரூபம் தெரிய வர அவர்களுக்கு எதிராக புறப்படுகிறார் அந்த ஆங்கிலேயர்களால் அவருக்கு ஏற்பட்ட ஏற்பட்ட விபரீதத்தை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். இதுதான் இந்த படத்தின் கதை

காளி வெங்கட் படத்தின் நாயகன் என்று கூட சொல்லலாம் மலை கிராமத்தில் இருக்கும் இவர் தபால் கொடுப்பது பெரிய சிரமமாக நினைக்கிறார் 33 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லையே என்ற வருத்தமும் இருக்கிறது இதனால் இந்த ஊரை விட்டு எப்படியாவது ட்ரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார் ஆனால் அவருக்கு அது கிடைக்கவில்லை இப்படி இருக்கும் சமயத்தில் ஒரு வயதான பெண்மணிக்கு ஒரு அரசாங்க தபால் வர அதை பல மயில்கள் நடந்து பல மலைகள் கடந்து கொண்டு போய் கொடுக்க வேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது செல்லும் வழியில் ஒரு பெரியவர் மாதேஸ்வரன் யார் மாதேஸ்வரன் போட்ட பாதையில்தான் இப்போது நடக்கிறோம் என்று மாதேஸ்வரன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார். அந்த மாதேஸ்வரன் கதையும் தபால் கொடுக்க வந்த வயதான பெண்மணி கதையும் கேட்டு மனம் உருகுகிறார் காலி வெங்கட் இதன் மாற்றம் மீண்டும் இதே ஊரில் தபால்காரனாக பயணிக்க வேண்டும் என்றும் எண்ணம் ஏற்படுகிறது. அப்போதுதான் ஒரு தபால்காரன் என் வாழ்க்கை என்ன என்பதை புரிந்து கொண்டு மனம் மாறுகிறார் இதே ஊரில் நாம் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்படுகிறது ஒரு தபால்காரன் என்றால் யார் என்ற பெருமை அவருக்கு அவருக்குள் ஏற்படுகிறது இந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்து இருக்கிறார் என்று சொன்னால் மிகை ஆகாது.

படத்தில் பலர் புதிய முகங்கள் தான் ஒரு சிலரே தெரிந்த முகங்கள் அனைவருமே அந்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக ஏற்று நடித்திருக்கிறார்கள் படம் மிகவும் ஒரு யதார்த்தமான ஒரு கதையாகத்தான் அமைந்திருக்கிறது முதல் பாதியில் மட்டும் கொஞ்சம் விறுவிறுப்பு இல்லை இல்லை என்றால் படம் மேலும் மிகச் சிறந்த படமாக அமைந்திருக்கும். இருந்தாலும் இயக்குனரை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும் ஒரு அற்புதமான கதை ஒரு வித்தியாசமான திரைக்கதை மூலம் ஜனரஞ்சகமாக கொடுத்திருப்பது மிகவும் பாராட்ட வேண்டிய விஷயமே அதோடு அவர் நடிப்பும் நம்மை பிரமிக்க வைக்கிறது இது அவருக்கு முதல் படமா என்று தோன்ற வைக்கிறது முன்ன அனுபவம் இல்லாமல் ஒரு படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் என்பது பாராட்ட வேண்டிய விஷயம்.
படத்தின் ஒளிப்பதிவாளர் கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும் அற்புதமான ஒளிப்பதிவாளர் மலைப்பிரதேசங்களை நம் கண் முன்னாடி நிறுத்தி வைத்திருக்கிறார் அதோடு இசையமைப்பாளரும் பின்னணிசையில் அற்புதமான ஒரு இசையை கொடுத்து இயக்குனருக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்திருக்கிறார் கண்டிப்பாக அனைவரும் ரசிக்க வேண்டிய ஒரு படமாக அமைந்திருக்கிறது.