Monday, May 20
Shadow

இந்த கிரைம் தப்பில்லை – திரைவிமர்சனம்

 

நடிகர்கள்: ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன், வெங்கட் ராவ், கிரேசி கோபால் மற்றும் பலர் நடிப்பில் பரிமளவாசன் இசையில் கார்த்திகேயன் ஒளிப்பதிவுவில் தேவகுமார் இயக்கத்தில் வெளிவந்துஇ இருக்கும் படம் இந்த கிரைம் தப்பில்லை

செல் போன் கடையில் வேலை பார்க்கிறார் மேக்னா. அப்போது, அங்கு வரும் 3 இளைஞர்களை வேறு வேறு பெயரில் தன் பின்னால் சுற்ற வைக்கிறார் மேக்னா.

அதே சமயத்தில், ரிட்டையர்ட் ராணுவ வீரரான ஆடுகளம் நரேன், சைலண்டாக ஆப்ரேஷன் ஒன்றிற்கு ப்ளான் செய்து வருகிறார். இந்த ஆப்ரேஷனை பாண்டி கமலை வைத்து நடத்த திட்டம் தீட்டுகிறார் ஆடுகளம் நரேன்.

மேக்னா எதற்காக அந்த இளைஞர்களை தன் பின்னால் சுற்ற வைக்க வேண்டும்.?? ஆடுகளம் நரேன் யாரை டார்கெட் செய்கிறார்.?? இதுதான் படத்தின் கதை.

பெண்களை அவர்களது உரிமை இல்லாமல் பாலியல் துன்புறுத்தல் செய்து அவர்களை கொலை செய்யும் காமவெறி பிடித்த மிருகங்களுக்கு தண்டனை நாம் கொடுத்தாலும் தப்பில்லை என்ற லைனில் கதை எழுதப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் இன்னும் எத்தனை படங்கள் இந்த கதைகளை சுற்றி சுற்றி எடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. மேக்னாவின் சண்டைக் காட்சிகள் செயற்கைத் தனமாகவே தென்பட்டது.

படத்தில் ஒரு தெளிவான போக்கு இல்லை. இதில், பிரபாகரன், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் குறியீடு வேறு படத்தில் வைக்காமல் இல்லை. வில்லன் வீட்டில் தமிழக முதல்வரின் காலண்டர் இருக்கிறது.

படம் ஓடிக் கொண்டிருக்கும் போது, எந்த வித சம்மந்தமும் இல்லாமல் சாதிய பாடலும் ஒன்று எட்டிப் பார்த்துச் செல்கிறது. எதற்காக யாருக்காக இந்த படங்களை இயக்குகிறார்கள் என்ற காரணம் தெரியவில்லை.

ஆடுகளம் நரேனின் நடிப்பு செயற்கைத் தனமாக தெரிந்தது. பாண்டி கமல் எப்போதும் வெறி பிடித்தவராகவே சுற்றித் திரிகிறார். பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் அப்பாவையே அழைத்து வந்து கையில் பணம் கொடுத்து வழக்கை வாபஸ் பெற கூறுவதெல்லாம் என்ன மாதிரியான மன நிலையில் இந்த மாதிரியான காட்சிகளை அமைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

திடீர் திடீரென்று பின்னணி இசை ஜம்ப் ஆகிக் கொண்டு வேறு வேறு திசைக்குச் சென்றது நம்மை பெரிதும் டிஸ்டர்ப் ஆக்கிவிடுகிறது. ஒளிப்பதிவு சற்று ஆறுதல்.

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் சொல்லப்பட வேண்டிய கதையை எடுத்திருப்பதால் இயக்குனருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளலாம்.

இந்த கிரைம் தப்பில்லை மிக பெரிய தப்பு